வாங்க தூண்டும் ஸ்மார்ட்வாட்ச்! 250mAh பேட்டரி.. 2 இன்ச் டிஸ்பிளே.. 70Hz ரெஃப்ரெஷ் ரேட்.. எந்த மாடல்?
ஃபயர் போல்ட் (Fire-Boltt ) நிறுவனத்தின் ஃபயர் போல்ட் நிஞ்ஜா ஃபிட் ப்ரோ (Fire-Boltt Ninja Fit Pro) ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையாக பட்ஜெட் விலையில் 250mAh பேட்டரி, 70Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் என்று அட்டகாசமான அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது.
ஃபயர் போல்ட் நிஞ்ஜா ஃபிட் ப்ரோ அம்சங்கள் (Fire Boltt Ninja Fit Pro Specifications): இந்த வாட்ச் 2.0 இன்ச் (240 x 282 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இது மற்ற வாட்ச்களைவிட மிக அதிகமாகும். இந்த டிஸ்பிளேவில் 70Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மல்டிபிள் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் வருகின்றன.

ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் உள்ளது. அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad), கால் ஹிஸ்டரி (Call History), சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync Contacts) அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) உள்ளன. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) இருக்கிறது.
ஹெல்த் மானிட்டர்களை பொறுத்தவரையில், ஹாட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (SpO2 Monitor), ப்ரீத் டிரெய்னிங் (Breathe Training), டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங் (Daily Activity Tracking) இருக்கின்றன. IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
250mAh பேட்டரி வருகிறது. 20 நாட்கள் ஸ்டாண்ட்பை மோடிலும், 6 நாட்கள் யூசேஜ் மோடிலும் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும், ஸ்மார்ட் நோட்டிபிக்கேஷன்ஸ் (Smart Notifications), ரிமைன்டர் (Remainder), பைண்ட் மை போன் (Find My Phone), வெதர் அப்டேட் (Weather Update), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), டைமர் (Timer), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), அலாரம் (Alarm) உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.
இந்த ஃபயர் போல்ட் நிஞ்ஜா ஃபிட் ப்ரோ வாட்ச் பிளாக் (Black), ப்ளூ (Blue), பெய்ஜ் (Beige), கிரே (Grey), கிரீன் (Green) மற்றும் ரெட் (Red) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச், இன்று (ஜூலை 14) இரவு 7 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும். அமேசான் (Amazon)மற்றும் ஃபயர் போல்ட் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.
இவ்வளவு அம்சங்களை கொண்டிருக்கும் இந்த வாட்ச் அறிமுக சலுகையாக ரூ.1,699க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








