Home
Gadgets

இதென்ன குட்டி போனா? டிஸ்பிளேவில் புது அத்தியாயம்! எந்த ஸ்மார்ட்வாட்ச்!

ஃபயர் போல்ட் (Fire Boltt) நிறுவனத்தின் நிஞ்ஜா கால் ப்ரோ மேக்ஸ் (Ninja Call Pro Max,) ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் (Bluetooth Calling Smartwatch) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மார்க்கெட்டில் வரும் மற்ற வாட்ச்களை போலல்லாமல் பெரிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த வாட்ச்சின் மற்ற அம்சங்கள் விலை மற்றும் விற்பனை தேதியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலத்தில், மக்களிடையே சாதாரண வாட்ச் பயன்பாடு என்பது மலையேறி போய்விட்டது. யாராவது, புது வாட்ச் வாங்க வேண்டும் என்றால், ஸ்மார்ட்வாட்ச்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.
இதற்கு ஸ்மார்ட்வாட்ச்களில் வரும் ஹெல்த் மானிட்டர்கள், ப்ளூடூத் காலிங் வசதி, மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதென்ன குட்டி போனா? டிஸ்பிளேவில் புது அத்தியாயம்! எந்த ஸ்மார்ட்வாட்ச்?

இவற்றின் விற்பனையும் நன்றாக இருப்பதால், ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனங்கள், புதுப்புது அம்சங்கள் மற்றும் டிசைன்களில் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ஃபயர் போல்ட் நிறுவனத்தின் நிஞ்ஜா கால் ப்ரோ மேக்ஸ் வாட்ச் குட்டி போனை போல பெரிய டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபயர் போல்ட் நிஞ்ஜா கால் ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்: இந்த வாட்ச் 2.01 இன்ச் (240*296 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவின் அளவு மற்ற ஸ்மார்ட்வாட்ச்களைவிட சற்று அதிகமாகும். மல்டிபிள் கஸ்டமைஸ் வாட்ச் பேஸ்கள் (Multiple Customizable Watch Faces) கொடுக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) உள்ளது.

அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad), கால் ஹிஸ்டரி (Call History), சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync contacts) அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 120+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (120+ Sports Mode) இருக்கின்றன. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) கொடுக்கப்பட்டுள்ளது. ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire-Boltt Health Suite) அம்சங்கள் உள்ளன.

அதில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitoring), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor), ப்ரீத் டிரெய்னிங் மானிட்டர் (Breathe Training), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) வருகின்றன. IP67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள் (Smart Notifications), சேடெண்டரி ரிமைண்டர் (Sedentary remainder), ஃபைன்ட் மை போன் (Find My Phone), வெதர் அப்டேட் (Weather Update), கேமரா கன்ட்ரோல் (Camera Control), டைமர் (Timer), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), அலாரம் (Alarm) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த வாட்ச் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும். ஸ்டாண்ட்பை மோடில் 15 நாட்கள் வரையில் பேக்கப் கிடைக்கும். இந்த ஃபயர் போல்ட் நிஞ்ஜா கால் ப்ரோ மேக்ஸ் வாட்ச் பிளாக் (Black), பிங்க் (Pink), ப்ளூ (Blue), கிரே (Grey), கோல்டன் பிளாக் (Golden Black) ஆகிய கலர்களின் வருகிறது.

அமேசானில் (Amazon) தளத்தில் வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச்சின் அறிமுக விலை ரூ.1,599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt Ninja Call Pro Max Launched in India With Large Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X