இவ்ளோ தானா? ரஃப் அண்ட் டஃப் லுக்.. ஃபுல் மெட்டல் பாடி.. HD டிஸ்பிளே.. 400mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஃபுல் மெட்டல் பாடி, எச்டி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஃபயர் போல்ட் ஹெல்த் சூட், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பிரம்மாண்டமான அம்சங்களுடன் பிரீமியம் லுக்கில் ஃபயர் போல்ட் மார்ஷல் (Fire Boltt Marshal) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
இப்போது, மார்கெட்டில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்வாட்ச்களின் டிசைனுக்கே ஆர்டர்கள் பிச்சி எடுக்கிறது. இதுபோதாது என்று, ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டன்ட், இன்பில்ட் கேம்ஸ், வெதர் அப்டேட் போன்ற ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படும் பெரும்பாலான அம்சங்களையும் கொண்டு இருக்கின்றன. இருப்பினும், அவற்றில் கொடுக்கப்படும் ஹெல்த் மானிட்டர்கள் மட்டுமே அதன் விற்பனையை சூடு பிடிக்க வைக்கிறது.

அந்த வரிசையில், வெறும் ஹெல்த் மானிட்டர்கள் மட்டுமல்லாமல், 400mAh பேட்டரி, ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், கேமரா கன்ட்ரோல், பைண்ட் மை போன் போன்ற பிளாக்ஷிப் அம்சங்களையும், ஃபயர் போல்ட் (Fire Boltt) நிறுவனத்தின் ஃபயர் போல்ட் மார்ஷல் ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. இதன் விலை நிலவரம் என்ன? எங்கு ஆர்டர் செய்யலாம்? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
ஃபயர் போல்ட் மார்ஷல் அம்சங்கள் (Fire Boltt Marshal Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் எச்டி (HD) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Display Multiple Watch Faces) வருகிறது. ஃபுல் மெட்டல் பாடி (Full Metal Body) டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) அம்சம் வருகிறது.
இதற்காக இன்பில்ட் மைக் (Mic) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad), கால் ஹிஸ்டரி (Call History), சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync Contacts) அம்சங்கள் வருகின்றன. இந்த வாட்ச்சில் ரோட்டேட்டிங் கிரவுன் (Rotating Crown) இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக 2 ஃபுஸ் பட்டன்கள் (Push Buttons) கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.
இதில் 123 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes) வருகின்றன. வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் இருக்கிறது. ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire Boltt Health Suit) வருகிறது. ஆகவே, 4 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking) மற்றும் மென்சுரல் டிராக்கிங் (Menstrual Tracking) ஆகியவை வருகின்றன. மேலும், இன்-பில்ட் கேம்ஸ் (In-built Games), கால்குலேட்டர் (Calculator), டிரிங்கிங் வாட்டர் ரிமைன்டர் (Drink Water Reminder) போன்ற அம்சங்கள் வருகிறது.
அதுமட்டுமல்லால், ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் (Smart Notifications), வெதர் அப்டேட் (Weather Update), பைண்ட் போன் (Find Phone), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் கேமரா (Camera Control) அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபயர் போல்ட் மார்ஷல் ஸ்மார்ட்வாட்ச் சில்வர் (Silver), பிளாக் (Black), கோல்டு (Gold) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த வாட்ச்சின் பட்ஜெட் ரூ.10,000 க்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அறிமுக சலுகையாக வெறும் ரூ.2,499 க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது, ஃபயர் போல்ட்.காம் (Fire Boltt.com) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பட்ஜெட் விலையில், பக்காவான பேட்டரி பேக்கப், பிச்சியெடுக்கும் டிசைன் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த ஃபயர் போல்ட் மார்ஷல் ஸ்மார்ட்வாட்ச் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








