Home
Gadgets

அடிச்சு தூக்கிய பட்ஜெட்.. ரூ.1,499 போதும்.. கிளாசிக் டிசைன்.. டிரெண்டிங் பீச்சர்.. எந்த மாடல்?

கம்மி பட்ஜெட்டில் கிளாசிக் டிசைன், டிரெண்டிங் பீச்சர்கள் என்று மிரட்டலாக ஃபயர் போல்ட் நிறுவனத்தின் ஃபயர் போல்ட் லுமோஸ் (Fire Boltt Lumos) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சின் விலை, விற்பனை மற்றும் அம்சங்கள் குறித்த முழு விவரங்கள் இதோ.

ஃபயர் போல்ட் லுமோஸ் அம்சங்கள் (Fire Boltt Lumos Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி (Stainless Steel Body) டிசைன் கொண்டுள்ளது. அதோடு ரோடேட்டிங் கிரவுண் (Rotating Crown) கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாடலில் 1.91 இன்ச் (240 x 280 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது.

ரூ.1,499 போதும்.. கிளாசிக் டிசைன்.. டிரெண்டிங் பீச்சர்.. எந்த மாடல்?

இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கருடன் (Inbuilt Mic/Speaker) ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கால் ஹிஸ்டரி (Call History), குயிக் டயல் பேட் (Quick Dial Pad), சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync Contacts) ஆகிய சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சில் 100+ கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces) மற்றும் 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன.

இதில் ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், கிளம்பிங் போன்ற முக்கிய மோட்களும் இருக்கின்றன. இந்த ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) மற்றும் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fireboltt Health Suite) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, முக்கியமான ஹெல்த் டிராக்கர்கள் (Health Trackers) மற்றும் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன.

அந்த வகையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) மற்றும் வுமன் ஹெல்த் டிராக்கர் (Women Health Tracker) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆப்ஸ், கால் மற்றும் எஸ்எம்எஸ் சப்போர்ட்டுக்கான ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notifications) பீச்சர் வருகிறது.

ரூ.1,499 போதும்.. கிளாசிக் டிசைன்.. டிரெண்டிங் பீச்சர்.. எந்த மாடல்?

அதேபோல டிரிங் வாட்டர் ரீமைண்டர் (Drink Water Reminder) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sedentary Reminder) கொடுக்கப்பட்டுள்ளன. இன்-பில்ட் கேம்ஸ் (In-built Games) சப்போர்ட் இருக்கிறது. மேலும், வழக்கமான வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), கால்குலேட்டர் (Calculator), அலாரம் (Alarm), டைமர் (Timer) மற்றும் ஸ்டாப்வாட்ச் (Stopwatch) போன்றவை வருகின்றன.

இந்த ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் கேமரா கன்ட்ரோல் (Camera Control) செய்து கொள்ள முடியும். இந்த மாடலில் பிளாக் (Black), ப்ளூ (Blue), கோல்டு (Gold), சில்வர் (Silver) மற்றும் ரோஸ் கோல்டு (Rose Gold) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இந்த ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அமேசான்.இன் (Amazon.in) மற்றும் ஃபயர் போல்ட்.காம் (Fireboltt.com) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ள முடியும். இந்த வாட்ச்சின் விலையை பொறுத்தவரை ரூ.1,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை அறிமுக சலுகை மட்டுமேயாகும். ஆகவே, விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கம்மியான பட்ஜெட்டில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி ஸ்மார்ட்வாட்ச் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் நல்ல தேர்வாக இருக்கும். அதேபோல ஹெல்த் மானிட்டர்கள் இருப்பதால் ப்ரீமியம் அனுபவத்தை கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
Fire Boltt Lumos With Stainless Steel Body Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X