Just In
- 21 hrs ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 23 hrs ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 1 day ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 1 day ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Movies
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஆப்பிள் வாட்ச் உடன் போட்டி போடும் போலயே: பிரபல நிறுவனம் அறிமுகம் செய்த தரமான ஸ்மார்ட்வாட்ச்.!
பார்ப்பதற்கு ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்று இருக்கும் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஃபயர் போல்ட் நிறுவனம். அதாவது இந்தியாவைச் சேர்ந்த AIoT பிராண்டு ஃபயர் போல்ட் ஆனது புதிய ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்தியச் சந்தையில் அறிமுகமான புதிய ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.96-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
மேலும் அல்ட்ரா நேரோ ஃபிரேம் டிசைன் மற்றும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது சீராக இயங்கும் கிரவுன், 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், ஸ்கிராட்ச் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது.
அதேபோல் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் காண்டாக்ட்ஸ் மற்றும் டயலர் ஆப்கள் பிரீலோடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 5 ஜிபிஎஸ் அசிஸ்ட் மோட்களை கொண்டிருக்கிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்.
ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும் என நிறுவனம் கூறுகிறது. மேலும் ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குயிக் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்.

இந்த ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச்-ஐ பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பிளாக், புளூ, கோல்டு, பிளாக் & கோல்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஃபயர் போல்ட் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. வரும் டிசம்பர் 30-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வருகிறது.
அதேபோல் கடந்த வாரம் போட் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது போட் வேவ் எலெக்ட்ரா (boAt Wave Electra) என்று அழைக்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது. போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.81-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு HD ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது IP 68 தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.
போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் அலுமினியம் அலாய் டிசைன்-ஐ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இதயத் துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற பல அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். பிரீதிங் டிரெயினிங்,ஹைட்ரேஷன் அலர்ட், ஆக்டிவிட்டி டிராக்கர் மற்றும் 100-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் உள்ளன. பின்பு பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச்.
போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அதிகபட்சமாக 50 காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து வைத்து எளிமையாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடல். குறிப்பாக இதன் அறிமுக சலுகையாக ரூ.1,799-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470