சும்மா கிழி ஸ்மார்ட்வாட்ச்.. அமோலெட் டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. மெட்டாலிக் டிசைன்.. விலை வேற கம்மி!
ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் ஃபயர்-போல்ட் கிளாடியேட்டர் பிளஸ் (Fire-Boltt Gladiator Plus) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில், அமோலெட் டிஸ்பிளே, மெட்டாலிக் ஸ்ட்ராப், ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் விலை, அம்சங்கள் குறித்த விவரம் இதோ.
ஃபயர்-போல்ட் கிளாடியேட்டர் பிளஸ் அம்சங்கள் (Fire-Boltt Gladiator Plus Specifications): இந்த ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச் 1.96 இன்ச் (410 x 502 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேய்ஸ் ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். அதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இவையெல்லாம் ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிகரான டிஸ்பிளே அம்சங்களாகும்.

மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple Watch Faces) கொடுக்கப்பட்டுள்ளன. ஃபுல் மெட்டாலிக் கிராக் ரெசிஸ்டன்ட் பாடி (Full Metallic Crack Resistant Body) டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) வசதி இருக்கிறது. அதோடு கால் ஹிஸ்டரி (Call History), குயிக் டயல் பேட் (Quick Dial Pad), சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync Contacts) அம்சங்கள் வருகின்றன.
இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் பக்கவாட்டில் ஒரு கிரவுன் மற்றும் குயிக் அக்சஸ் பட்டன் வருகிறது. 115+ ஸ்போர்ட்ஸ் மோட் கொடுக்கப்பட்டுள்ளன. வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் உள்ளது. IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.
மொத்தமாக நான்கு ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitor) வருகின்றன. அதில் ஸ்லீபிங்க் மானிட்டர் (Sleeping Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking), வுமன் ஹெல்த் டிராக்கிங் (Women Health) ஆகியவை அடங்கும். டிரிங் வாட்டர் (Drink Water) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sedentary Remainder) இருக்கிறது.
மேலும், வெதர் அப்டேட் (Weather Update), இன்பில்ட் கேம்ஸ் (Inbuilt Games), மியூசிக் (Music) மற்றும் கேமரா கன்ட்ரோல் (Camera Control) அம்சங்கள் இருக்கின்றன. அதோடு ஸ்மார்ட் நோட்டிஃபிக்கேஷன் (Smart Notifications) அம்சம் இருக்கிறது. இந்த ஃபயல் போல்ட் கிளாடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் மோடில் (Classic Mode) 7 நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.
அதோபோல ஸ்டாண்ட்பை மோடில் (Standby Mode) தொடர்ந்து 20 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். இது சிலிகான் ஸ்ட்ராப் மற்றும் மெட்டல் ஸ்ட்ராப் என்று 2 வெர்ஷனில் கிடைக்கிறது. அந்த வகையில், மெட்டல் ஸ்ட்ராப் வெர்ஷனில் (Metal Strap Version) ஸ்டீல் பிளாக் (Steel Black), ப்ளூ (Blue), கிரே (Grey), சில்வர் (Silver) மற்றும் ரோஸ் கோல்டு (Rose Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
அதேபோல சிலிகான் ஸ்ட்ராப் வெர்ஷனில் (Silicone Strap Version) ஓசன் பிளாக் (Ocean Black), ஆரஞ்ச் (Orange) மற்றும் ஓசன் ப்ளூ (Ocean Blue) ஆகிய கலர்கள் கிடைக்கிறது. மேலும், நைலான் ஸ்ட்ராப் வெர்ஷனில் (Nylon Strap Version) பெய்ஜ் (Beige), க்ரீன் (Green) மற்றும் ஆரஞ்ச் (Orange) கலர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசான் (Amazon) மற்றும் ஃபயர் போல்ட் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
ரூ.8,000 பட்ஜெட்டில் வெளியாகியிருந்தாலும், அறிமுக சலுகையாக ரூ.2,999க்கு கிடைக்கிறது. அதில், மெட்டாலிக் வெர்ஷனின் விலை ரூ.3,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








