கம்மி காசில் காதை அலறவிடும் பாஸ்.! Fire Boltt Fire Pods Ninja 601 இயர்போன்ஸ் விற்பனை.! விலை என்ன?
வயர் வைத்த இயர்போன் மாடல்களை பயன்படுத்திய காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.. இப்பொழுது, எல்லோரும் வயர்லெஸ் இயர்போன்ஸ் மாடல்களையே பயன்படுத்த விரும்புகிறார்கள்.! காரணம், இது 'சிக்கல்' அற்றது.. ஆம், 'சிக்கல் அற்றது' என்பதை நாம் அழுத்தமாகவே கூறலாம்..

வயர்லெஸ் இயர்போன்ஸ்களுக்கு அதிகரிக்கும் மவுசு.!
ஏனெனில், வயர்ட் ஹெட்ஃபோன்ஸ் (wired headphones) டிவைஸ்களில் உள்ள கேபிள்களில் இருக்கும் சிக்கல்களை எடுப்பதே மிகவும் சிரமமான காரியமாகும்.
அதில் உள்ள சிக்கல்களைப் பொறுமையாக எடுத்து முடிப்பதற்குள் மண்டை சூடாகிவிடும்.
அப்படியான சிக்கல் எல்லாம் இப்பொழுதுவயர்லெஸ் இயர்போன்ஸ் (wireless earphones) பயன்படுத்தும் பயனர்களுக்கு இல்லவே இல்லை என்பதை உண்மை.!
இதனால் தான், உலக அளவில் வயர்லெஸ் இயர்போன்ஸ் சாதனங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது.

ஃபயர் போல்ட் ஃபயர் பாட்ஸ் நிஞ்சா 601 (Fire Boltt Fire Pods Ninja 601)
பல தயாரிப்பு நிறுவனங்கள் கூட, இப்பொழுது இந்த கேட்டகிரியை வேகமாக வளர்த்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனமாக 'ஃபயர் போல்ட் (Fire Boltt)' நிறுவனம் திகழ்கிறது.
இந்த நிறுவனம் இப்பொழுது ஃபயர் போல்ட் ஃபயர் பாட்ஸ் நிஞ்சா 601 (Fire Boltt Fire Pods Ninja 601) என்ற புதிய TWS இயர்பாட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

படு சூப்பரான அம்சங்களுடன் புது TWS இயர்போன்ஸ் டிவைஸ் அறிமுகம்.!
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த இயர்பட்ஸ் (earbuds) சாதனம், கேமிங் பயனர்களுக்கான ஆதரவுடன் வருகிறது. இதைச் சாதாரணமாகவும் பயன்படுத்தலாம்.
இருப்பினும் கேமர்களுக்கான பிரத்தியேகமான சில அம்சங்களுடன் இந்த ஹெட்ஃபோன்ஸ் (headphones) வருகிறது. பார்ப்பதற்கே மிகவும் அருமையான கூல் பியூச்சரிஸ்டிக் டிசைன் உடன் இந்த இயர்போன்ஸ் (earphones) சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் குறைவான விலையில் படு சூப்பரான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபயர் போல்ட் ஃபயர் பாட்ஸ் நிஞ்சா 601 இல் என்ன ஸ்பெஷல்?
இந்த இயர்போன் சாதனம் சியோமி (Xiaomi), ரியல்மீ (realme), போட் (boArt), நாய்ஸ் (Noise) போன்ற பல பிராண்டுகளுடன் நேரடியாகப் போட்டிருக்கிறது.
சரி, இப்போது இந்த சாதனம் என்ன அம்சங்களுடன் வருகிறது என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
இந்த ஃபயர் போல்ட் ஃபயர் பாட்ஸ் நிஞ்சா 601 உங்கள் காதுகளில் கச்சிதமாகப் பொருந்தும் மெல்லிய சிலிக்கான் பட்ஸ்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது சாய்ந்த இயர்பாட் டிசைனுடன் ஒரு ஹுக்கையும் கொண்டுள்ளது.

உங்கள் காதுகளை அலறவிடும் பாஸ்.! இது ரொம்ப ஸ்ட்ராங் பாஸ்.!
இது ஐபிஎக்ஸ் 6 (IPX6) ஆதரவு கொண்டு வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது.
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சார்ஜிங் கேசுடன், இந்த இயர்பாட்ஸ் சாதனம் எல்இடி லைட்களுடன் கலர்ஃபுல் ஆன தோற்றத்தில் கிடைக்கிறது.
இந்த சாதனம் 10mm கொண்ட ஃபுல் டைனமிக் ட்ரைவர்களுடன் - உயர்தர பாஸ் (strong bass) அனுபவத்தை வழங்குகிறது. உண்மையை சொல்லப் போனால் இதில் உள்ள பாஸ் உங்கள் காதுகளை அதிரவிடும்.

என்ன வேண்டும் உங்களுக்கு எல்லாமே இதுல இருக்கு.!
அதேபோல், இதில் தெளிவான அழைப்பு தரத்திற்கு ஏற்றார் போல் ஏஎன்சி (ANC) மற்றும் இஎன்சி (ENC) தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது.
கேமிங் அனுபவத்திற்காக இது 38ms கொண்ட லோ-லேட்டன்ஸி அம்சத்தையும் கொண்டுள்ளது. இதில் சூப்பர் சிங்க் (super sync) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone) உடன் இந்த சாதனம் ஆட்டோமேட்டிக்காக பேர் (automatic paring Bluetooth earphones) செய்யப்படுகிறது.

எவ்வளவு நேர பயன்பாட்டை இந்த ஃபயர் போல்ட் ஃபயர் பார்ட்ஸ் நிஞ்சா 601 வழங்குகிறது?
சார்ஜிங் கேஸில் (charging case) இருந்து இந்த சாதனத்தை வெளியில் எடுத்தவுடன் தானாகவே உங்கள் போனுடன் பேர் செய்து கொள்கிறது.
இது 5.2 ப்ளூடூத் ஆதரவுடன் வருகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் மொத்தமாக 30 மணி நேரம் பேட்டரி லைஃப் கிடைக்கிறது.
ஒரே சார்ஜில் முழுமையாக 6 மணி நேரப் பயன்பாட்டை வழங்குகிறது.
இந்த ஃபயர் போல்ட் ஃபயர் பார்ட்ஸ் நிஞ்சா 601 இயர்பட்ஸ் சாதனம், பிளாக் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது.

Fire Boltt Fire Pods Ninja 601 விலை என்ன?
இதன் விலை இப்பொழுது வெறும் ரூபாய் 1299 மட்டுமே. பிலிப்கார்ட் (Flipkart) வழியாகவும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது.
ஒரு பெஸ்ட்டான, கூலான, கலர்ஃபுல் இயர்பட்ஸ் சாதனத்தை நீங்கள் வாங்க விரும்பினால் இந்த இயர்போன்ஸ் ஃபயர் பாட்ஸ் நிஞ்சா 601 சாதனத்தை மிஸ் செய்யவேக் கூடாது.!


Click it and Unblock the Notifications








