முழு சார்ஜ் செய்தால் 5 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்: தரமான ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபயர் போல்ட் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.
அதாவது ஃபயர் போல்ட் நிறுவனம் தற்போது புதிய ஃபயர் போல்ட் எடர்னோ எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஃபயர் போல்ட் எடர்னோ அம்சங்கள்
புதிய ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.99-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 240x283 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். அதேபோல் இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர், குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்ஸ் உள்ளிட்ட அசத்தலான வசதிகள் இதில் உள்ளன. மேலும் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், இன்பில்ட் கேம்ஸ் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச்.

அதேபோல் புதிய ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது 120-க்கும் அதிக வொர்க்அவுட் மோட்கள், SpO2 மாணிட்டரிங், ஹார்ட் ரேட் மாணிட்டரிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற அசத்தலான அம்சங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்.
280 எம்ஏஎச் பேட்டரி வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழு சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்குத் தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புளூ, பிளாக், பெய்க், சில்வர் கிரீன், பிளாக் சில்வர் மற்றும் கோல்டு பின்க் நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபயர் போல்ட் எடர்னோ விலை
அதேபோல் ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை ரூ.1999-விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும். மேலும் இந்நிறுவனம் கடந்த மாதம் ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இப்போது அந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச்
ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.28-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு 240x240 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள ஃபிரேம் உறுதியாகவும், தரமாகவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டயல் மற்றும் ஸ்டிராப், உயர் ரக செராமிக் பாடி கொண்டுள்ளது.

ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் கேமரா கண்ட்ரோல், நோட்டிஃபிகேஷன், வானிலை அப்டேட்கள் மற்றும் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது.இதுதவிர ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வாய்ஸ் அசிஸ்டண்ட், TWS கனெக்டிவிட்டி, ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
இந்த ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் 350 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். ஹார்ட் ரேட், ஸ்லீப் சைக்கிள், ஆக்சிஜன் சைக்கிள் போன்றவற்றை டிராக் செய்யும் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் மாடல். மேலும் ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.2,999-விலையில் விற்பனைக்கு வந்தது.


Click it and Unblock the Notifications








