முழுசா 60 சதவீதம் தள்ளுபடி.. கிளாசிக் டிசைன்.. வயர்லெஸ் சார்ஜிங்.. லேடிஸ் ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?
பிரீமியம் கிளாசிக் டிசைன், அல்ட்ரா பியூச்சர் அம்சங்கள் என்று பெண்களை கவரும் வகையில் ஃபயர் போல்ட் (Fire-Boltt ) நிறுவனத்தின் ஃபயர் போல்ட் எமரால்டு (Fire-Boltt Emerald) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சுக்கு கிட்டத்தட்ட 60 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது மார்கெட்டில் வரும் ஸ்மார்ட்வாட்ச்கள் எல்லாம், புதுப்புது டிசைன்களிலும், அம்சங்களிலும் எளிதாக மக்களை கவர்ந்து விடுகின்றன. இதில் பெரும்பாலான ஸ்மார்ட்வாட்ச்கள் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் பயன்படுத்தும் வகையிலேயே அறிமுகம் செய்யப்படும். ஆனால், ஃபயர் போல்ட் நிறுவனம், பிரத்யேகமாக பெண்களுக்காக மட்டுமே ஃபயர் போல்ட் எமரால்டு ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வாட்ச், ரத்தின கற்கள் பொறிக்கப்பட்டு, டைமண்ட் ஷேப் டயல் டிசைன் கொண்டிருக்கிறது. இதையெல்லாம், பார்த்தால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பிரீமியம் வாட்ச் போல இருக்கும். ஆனால், அதில் ஹெல்த் மானிட்டர்கள், வயர்லெஸ் சார்ஜிங் என்று, இன்றைய கால அம்சங்களை கொடுத்து புதிய முயற்சியை எடுத்துள்ளது ஃபயர் போல்ட் நிறுவனம். இந்த வாட்ச்சின் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் பின்வருமாறு.
ஃபயர் போல்ட் எமரால்டு அம்சங்கள் (Fire-Boltt Emerald Specifications): இந்த எமரால்டு வாட்ச் பிரீமியம் மெட்டாலிக் பாடி கொண்டுள்ளது. அதேபோல டைமண்ட் கட் கிளாஸ் (Diamond Cut Glass) டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோட்டேட்டிங் கிரவுண் (Rotating Crown) கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.09 இன்ச் (240 x 240 பிக்சல்கள்) எச்டி (HD) டிஃஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது.
மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple Watch Faces) வருகின்றன. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) அம்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக கால் ஹிஸ்டரி (Call History), குயிக் டயல் பேட் (Quick Dial Pad), சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync Contacts) அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இல்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் வருகின்றன. ரன்னிங், ஸ்விம்மிங், வாக்கிங் போன்ற மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) கொடுக்கப்பட்டுள்ளன. வாய்ஸ் அசிஸ்டன்ட் வருகிறது.
இந்த ஃபயர் போல்ட் எமரால்டு வாட்ச்சில் 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), வுமன் ஹெல்த் மானிட்டர் (Women Health Monitor), ப்ரீத் டிரெய்னிங் மானிட்டர் (Breathe Training Monitor) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் 5 நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.
இதில் பிரம்மாண்ட அம்சமாக வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ஃபயர் போல்ட் எமரால்டு வாட்ச் கிரீன் (Green), ப்ளூ (Blue), ரோஸ் (Rose) மற்றும் கோல்டு (Gold) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
மேலும், இன்-பில்ட் கேம்ஸ் (In-built Games), ஸ்மார்ட் நோட்டிஃபிக்கேஷன் (Smart Notifications), வெதர் அப்டேட் (Weather Update), கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Camera and Music control), டைமர் (Timer), அலாரம் (Alarm), ஸ்டாப்வாட்ச் (Stopwatch) உள்ளிட்ட அம்சங்களும் வருகின்றன.
அதோடு ஸ்டீல் ஸ்ட்ராப் (Steel Strap) கிடைக்கிறது. இதுவொரு பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் என்பதால், அதன் பட்ஜெட் ரூ.14,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அறிமுக சலுகையாக 60 சதவீத தள்ளுபடி உடன் வெறும் ரூ.5,999 க்கு விற்பனைக்கு வருகிறது. அமேசான் (Amazon) மற்றும் ஃபயர் போல்ட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








