Home
Gadgets

தலைவன் வேற ரகம்.. ரூ.5,999 பட்ஜெட்ல SIM சிலாட்.. 4G கனெக்டிவிட்டி.. 2GB ரேம்.. எந்த மாடல்?

நானோ சிம் சிலாட், 4ஜி கனெக்டிவிட்டி, எச்டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஓஎஸ், 2ஜிபி ரேம் போன்ற ஸ்மார்ட்போனுக்கு நிகரான அம்சங்கள் மட்டுமல்லாமல், 800mAh பேட்டரியோடு பட்ஜெட் விலைக்கு ஃபயர் போல்ட் டிரீம் (Fire Boltt Dream) ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஃபயர் போல்ட் டிரீம் அம்சங்கள் (Fire Boltt Dream Specification): இந்த வாட்ச்சில் 2.02 இன்ச் (320 x 386 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ரோட்டேடிங் கிரவுன் (Rotating Crown) மற்றும் ஃபங்க்ஷன் பட்டன் (Function Button) கொண்டிருக்கிறது.

ரூ.5999 பட்ஜெட்ல SIM சிலாட்.. 4G கனெக்டிவிட்டி.. 2GB ரேம் வாட்ச்!

கிளவுட்-பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces) வருகின்றன. இந்த மாடலில் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ7 எம்பி (Quad-core Cortex A7MP) சிப்செட் மற்றும் மாலி டி820 எம்பி1 ஜிபியு (Mali T820 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த ஃபயர் போல்ட் டிரீம் வாட்ச்சில் 4ஜி எல்டிஇ (4G LTE) மற்றும் நானோ சிம் சிலாட் சப்போர்ட் வருகிறது. ஆகவே, எல்டிஇ காலிங் (LTE Calling) செய்து கொள்ளலாம். அதேபோல ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை (Wi-Fi) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் வருகின்றன.

கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) பயன்படுத்த முடியும். ஆகவே, வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களை நேரடியாக பயன்படுத்த முடியும். ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருவதால், இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது.

அதேபோல வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபயர் போல்ட் டிரீம் மாடலில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. 300+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) மற்றும் விஆர் வொர்க்அவுட் (VR Workout) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ரூ.5999 பட்ஜெட்ல SIM சிலாட்.. 4G கனெக்டிவிட்டி.. 2GB ரேம் வாட்ச்!

இந்த வாட்ச்சில் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire Boltt Health Suite) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் வருகிறது. அதோடு ரன்னிங், ஜாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் போன்றவற்றை கண்காணிக்க ஆக்டிவிட்டி டிராக்கர்கள் கொண்டிருக்கிறது.

இந்த ஃபயர் போல்ட் டிரீம் வாட்ச் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. 800mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 36 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். அதேபோல வாய்ஸ் காலிங், ஆப் யூசிஸ் போன்றவற்றை தொடர்ந்து செய்தாலும் 4 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்.

மொத்தமாக 50 கிராம் எடை வருகிறது. இந்த மாடலில் ஃப்யூஷன் ஃப்ளிக்கர் (Fusion Flicker), ஃபாரஸ்ட் ஃபிரின்ஜ் (Forest Fringe), டெனிம் ட்ரீம் (Denim Dream), கோகோ கோச்சர் (Cocoa Couture), மிட்நைட் கிரேஸ் (Midnight Grace),செர்ரி ஹக் (Cherry Hug), ஷேடோ க்ளைட் (Shadow Glide) ஆகிய கலர்கள் வருகின்றன.

அதேபோல ஐரிஷ் கிளாம் (Irish Glam), ஸ்கை சிசில் (Sky Sizzle), கோரல் ப்ரீஸ் (Coral Breeze), அக்வா சர்ஜ் (Aqua Surge) மற்றும் மிட்நைட் ஸ்டீல் (Midnight Steel) ஆகிய கலர்களும் இருக்கின்றன. இந்த வாட்ச் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டருக்கு வருகிறது. இதன் விலை ரூ.6,299ஆக இருக்கிறது.

அதேபோல மெட்டல் ஸ்ட்ராப் வேரியண்ட்டின் விலை ரூ.6,499ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுயைில் வெறும் ரூ.5,999 விலைக்கு விற்பனைக்கு வர இருக்கிறது. ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிகரான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த ஃபயர் போல்ட் டிரீம் மாடலை தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire Boltt Dream With Nano SIM Support Sale Via Flipkart From January 10 Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X