வேற மாதிரி மாடல்.. AMOLED டிஸ்பிளே.. 5 ஹெல்த் மானிட்டர்.. 4GB மெமரி.. மெட்டாலிக் டிசைன்.. எந்த வாட்ச்?
அமோலெட் டிஸ்பிளே, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன், ப்ளூடூத் காலிங், 4ஜிபி மெமரி, ஹெல்த் மானிட்டர்கள் போன்ற அம்சங்களுடன் பக்கா பிரீமியம் லுக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபயர் போல்ட் டயமண்ட் (Fire Boltt Diamond) ஸ்மார்ட்வாட்ச் நம்ப முடியாத தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஃபயர் போல்ட் டயமண்ட் அம்சங்கள் (Fire Boltt Diamond Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always-on Display) கொண்டுள்ளது. இதுவொரு அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும். இதில் 750 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 75Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இந்த வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன் (Stainless Steel Design) கொண்டுள்ளது. ரோட்டேட்டிங் கிரவுன் (Rotating Crown), 2 கன்ட்ரோல் பட்டன்கள் (Control Buttons) கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு ஷிம்மர் ஸ்ட்ராப்ஸ் (Shimmer Steel Straps) மற்றும் போஸ் ஸ்ட்ராப்ஸ் (Posh Steel Straps) மாடல் கொண்டிருக்கிறது.
இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச்சில் 120+ இன்-பில்ட் வாட்ச் பேஸ்கள் (in-built Watch Faces) வருகின்றன. இதில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, குயிக் டயல் பேட் (Quick Dial Pad), கால் ஹிஸ்டரி (Call History) மற்றும் சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync Contacts) ஆகிய சப்போர்ட் வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் (Inbuilt Mic and Speaker) கொண்டுள்ளது. இதே பட்ஜெட்டில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்வாட்ச்களில் இல்லாத வகையில், எம்பி3 சாங்ஸ் (MP3 Songs) சப்போர்ட்டுக்கான 4 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் கால்கள் மட்டுமல்லாமல், பாடல்களையும் கேட்டுக்கொள்ள முடியும்.

இந்த ஃபயர் போல்ட் வாட்ச்சில் ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற மேட்களுடன் 300+ ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes) வருகின்றன. வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) உள்ளது. இந்த வாட்ச்சில் 6 ஹெல்த் மானிட்டர்கள் கொண்ட ஃபயர்போல்ட் ஹெல்த் சூட் (FireBoltt Health Suite) கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீபிங் மானிட்டர் (Sleeping Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), வுமன் ஹெல்த் மானிட்டர் (Women Health Monitor) மற்றும் ப்ரீத் மானிட்டர் (Breathe Monitor) வருகின்றன. IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத் காலிங், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களுக்காக ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notifications) சப்போர்ட் வருகிறது. அதோடு வெதர் அப்டேட் (Weather Update), கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Camera and Music Control), டைமர் (Timer), அலாரம் (Alarm) மற்றும் ஸ்டாப்வாட்ச் (Stopwatch) ஆகியவை வருகின்றன.
இந்த ஃபயர் போல்ட் வாட்ச்சில் 5 இன்-பில்ட் கேம்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 260mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 4 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதுவே ஸ்டாண்ட்பை மோடில் 10 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த வாட்ச் ரூ.4,999 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த விலை அறிமுக சலுகை மட்டுமேயாகும். ஆகவே, விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அமேசான் (Amazon) மற்றும் ஃபயர்போல்ட்.காம் (FireBoltt.com) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரோஸ் கோல்டு பிரீமியம், கோல்டு பிரீமியம், பிளாக் பிரீமியம், பிளாக் பேசிக், சில்வர் பேசிக் மற்றும் சில்வர் பிரீமியம் ஆகிய கலர்களில் வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








