Home
Gadgets

பிளாட்டினம் லெவல்! பாத்துபாத்து செதுக்கிய டிசைன்! பட்ஜெட் விலையில் ஃபயர் போல்ட் மாடல்!

பார்த்தாலே கண்களை கொள்ளைக் கொள்ளும் வகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைனில் ஃபயர் போல்ட் ((Fire Boltt) நிறுவனத்தின் ஃபயர் போல்ட் டெஸ்டினி ஸ்மார்ட்வாட்ச் (Fire Boltt Destiny) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனித்துவமான டிசைனில் மட்டுமல்லாமல், மற்ற அம்சங்களிலும் பின்னிப் பெடல் எடுக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை, விற்பனை தேதி, அம்சங்கள் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மக்களிடையே ஸ்மார்ட்வாட்ச்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருப்பதால், புதுப்புது அம்சங்களிலும், டிசைன்களிலும் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஃபயர் போல்ட் நிறுவனம், தனது தனித்துவமான டிசைனுக்கே மிகவும் பெரும் பெயரை பெற்றுவிட்டது.

பிளாட்டினம் லெவல்.. பாத்துபாத்து செதுக்கிய டிசைன்.. எந்த மாடல்?

இந்த நிறுவனத்தின் புதிய ஃபயர் போல்ட் டெஸ்டினி ஸ்மார்ட்வாட்ச் புதுவிதமான, கச்சிதமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) டிசைனில் அள்ளித்தூக்கும் வகையில் இருக்கிறது. அதோடு, ஹெல்த் மானிட்டர்கள், ப்ளூடூத் காலிங், எச்டி டிஸ்பிளே என்று பல சிறப்பம்சங்களையும் வைத்திருக்கிறது. இந்த வாட்ச் அறிமுக விலை அடிப்படையில் மலிவாக கிடைக்கப் போகிறது.

ஃபயர் போல்ட் டெஸ்டினி அம்சங்கள் (Fire Boltt Destiny Specifications): இந்த ஃபயர் போல்ட் டெஸ்டினி ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் (360*360 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. ஜிங்க் அலாய் பிரேம் (Zinc Alloy Frame) டிசைனில் அலுமினியம் அலாய் பட்டன் (Aluminum Alloy button) கொண்டு பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறது.

மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple Watch Faces), 10 மெனு ஸ்டைல்கள் (Menu Styles) உள்ளன. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) வசதி உடன் சிங்க் காண்டாக்ட்ஸ் (Sync Contacts), குயிக் டயல் பேட் (Quick Dial Pad) அம்சம் இருக்கிறது. இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது. ஸ்லீப் மானிட்டர் (Sleeping Monitor), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ப்ளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor), மாதவிடாய் மானிட்டர் (Menstrual Monitor) ஆகியவை உள்ளன. IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்மார்ட் நோட்டிஃபிக்கேஷன், வெதர் அப்டேட், கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் உள்ளிட்ட பேஸிக் அம்சங்களும் வருகின்றன.

இந்த வாட்ச்சின் விலையை பொறுத்தவரையில், ரூ.1,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஃபயர் போல்ட் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இது அறிமுக விலையாகும் அடுத்த சில வாரங்களில் மீண்டும் விலை அதிகரிக்கலாம்.

மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt Destiny Smartwatch Launched With Stainless Steel Body Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X