Home
Gadgets

இவ்ளோ தானா? தெறிக்கும் டிசைன்.. பின்னியெடுக்கும் அம்சங்கள்.. மெட்டல் பாடி வேற.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் எச்டி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஹெல்த் மானிட்டர்கள், என்எஃப்சி பேமெண்ட் உள்ளிட்ட பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் ஃபயர் போல்ட் நிறுவனத்தின் ஃபயர் போல்ட் சைக்ளோன் (Fire Boltt Cyclone) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இப்போது வரும் ஸ்மார்ட்வாட்ச்களில் போனில் வரும் பெரும்பாலான அம்சங்கள் வந்துவிடுகின்றன. அதோடு ஹெல்த் மானிட்டர்களும் கொடுக்கப்படுவதால், அவற்றுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது, கேமிங், என்ஃப்சி பேமெண்ட வசதிகளும் ஸ்மாட்வாட்ச்களில் வர தொடங்கிவிட்டன. அந்த வரிசையில், பட்ஜெட் விலையில் ஃபயர் போல்ட் சைக்ளோன் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்ளோ தானா? தெறிக்கும் டிசைன்.. மெட்டல் பாடி வேற.. எந்த மாடல்?

ஃபயர் போல்ட் சைக்ளோன் அம்சங்கள் (Fire Boltt Cyclone Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.6 இன்ச் (400 x 400 பிக்சல்கள்) டிஎஃப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. ஃபுல் மெட்டாலிக் பாடி கொண்டுள்ளது. பக்கவாட்டில் க்ரெவுன் (Crown) மற்றும் குயிக் அக்சஸ் பட்டன் (Quick Access Button)கொடுக்கப்பட்டுள்ளது.

மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple Watch Faces) வருகின்றன. இதுவொரு ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) ஸ்மார்ட்வாட்ச் என்பதால் இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு கால் ஹிஸ்டரி (Call history), குயிக் டயல் பேட் (Quick Dial Pad), சிங்க் கான்டாக்ட்ஸ் (Sync Contacts) கொடுக்கப்பட்டுள்ளது.

85 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) உள்ளது. IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஸ்லீப்பிங் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர், ஹாட் ரேட் மானிட்டர் உள்ளிட்ட ஹெல்த் மானிட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதோடு டிரிங் வாட்டர் (Drink water) மற்றும் சிடென்டரி (Sedentary ) ரிமைன்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்மார்ட் நோட்டிபிக்கேஷன், வெதர் அப்டேட், 7 இன்பில்ட் கேம்ஸ், மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல் உள்ளிட்டவை இருக்கின்றன. பாஸ்கோட் லாக் மற்றும் ஜிபிஎஸ் வசதி வருகிறது.

பேமெண்ட் வசதிக்காக என்எஃப்சி கொடுக்கப்பட்டுள்ளது. 390mAh பேட்டரி வருகிறது. கிளாசிக் மோடில் 8 நாட்களுக்கும், ஸ்டாண்ட்பை மோடில் 25 நாட்களுக்கும் பேக்கப் கிடைக்கும். ப்ளூடூத் காலிங் தொடர்ந்து பயன்படுத்தினால், 5 நாட்கள் பேக்கப் கிடைக்கும். இந்த வாட்ச் கிரோ (Grey), ஆரஞ்ச் (Orange), யெல்லோ (Yellow), பிளாக் (Black) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.2,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அறிமுக சலுகை மட்டும் விரையில், அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt Cyclone with Full Metallic Body Bluetooth Calling Launched Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X