Home
Gadgets

யோசிக்காம வாங்கலாம்.. வெறும் ரூ.3,499 விலைக்கு பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?

ஃபயர் போல்ட் (Fire-Boltt) நிறுவனத்தின் ஃபயர் போல்ட் பிளிசார்ட் அல்ட்ரா (Fire Boltt Blizzard Ultra) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக், பட்டாசான அம்சங்கள் மற்றும் கண்களை கவரும் டிசைன் என்று பின்னி எடுக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இப்போதெல்லாம் ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக வளர்ந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்வாட்ச்களை வாங்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால், ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனங்களும் புதுப்புது அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்து வருகின்றன.

யோசிக்காம வாங்கலாம்! வெறும் ரூ.3,499 விலைக்கு பிரீமியம் லுக் வாட்ச்!

இதில் மெட்டாலிக் டிசைன் வாட்ச்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அவை விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், பிரீமியம் லுக்கில் ஃபயர் போல்ட் பிளிசார்ட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சில் எச்டி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஹெல்த் மானிட்டர்கள், இன்பில்ட் கேம்ஸ் என்று பெரும்பாலான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு அறிமுக சலுகையாக மிகவும் கம்மியான பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஃபயர் போல்ட் பிளிசார்ட் அல்ட்ரா அம்சங்கள் (Fire Boltt Blizzard Ultra Specifications): இந்த ஃபயர் போல்ட் வாட்ச் 1.28 இன்ச் (240 x 240 பிக்சல்கள்) எச்டி (HD) டிஎஃப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த வாட்ச்சின் பக்கவாட்டில் ரோட்டேட்டிங் கிரவுன் (Rotating Crown) கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0) கனெக்டிவிட்டி வருகிறது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) அம்சத்துடன் கால் ஹிஸ்டரி (Call History), குயிக் டயல் பேட் (Quick Dial Pad), சிங்க் காண்டாக்ட்ஸ் ( Sync Contacts) கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இன்பில்ட் மைக் (Inbuilt Mic) மற்றும் ஸ்பீக்கர் ( Speaker) கொடுக்கப்பட்டுள்ளது. ரன்னிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற 120 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes ) வருகின்றன.

வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் உள்ளது. மொத்தமாக 5 ஹெல்த் மானிட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor), ஸ்லீப்பிங் டிராக்கிங் (Sleeping Tracking), வுமன் ஹெல்த் டிராக்கர் (Women Health Tracker) மற்றும் ப்ரீதிங் டிரெனிங் (Breathe Training) ஆகிய மானிட்டர்கள் வருகின்றன.

ஆன்டி கோரோஷியன் டிசைனில் (Anti-Corrosion Design) உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இன்பில்ட் கேம்ஸ் (In-built Games), ஸ்மார்ட் நோட்டிஃபிக்கேஷன் (Smart Notifications), வெதர் அப்டேட் (Weather Update), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), டைமர் (Timer), அலாரம் (Alarm), ஸ்டாப்வாட்ச் (Stopwatch) உள்ளிட்ட அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஃபயர் போல்ட் பிளிசார்ட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் கோல்டு (Gold), கோல்டு மல்டிகலர் (Gold Multi Colour) மற்றும் சில்வர் (Silver) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் (Flipkart ) மற்றும் ஃபயர் போல்ட் தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வாட்ச் அறிமுக சலுகையாக ரூ. 3,499 விலையில் விற்பனைக்கு வருவதால் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலிவான பட்ஜெட்டில் பிரீமியம் லுக் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாட்ச்சை வாங்கலாம். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt Blizzard Ultra Smartwatch With Metal Body, Bluetooth Calling Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X