Home
Gadgets

அவ்ளோதானா? வெறும் ரூ.1,499 பட்ஜெட்ல METAL பாடி.. 600mAh பேட்டரி.. HD டிஸ்பிளே.. எந்த வாட்ச்?

வெறும் ரூ.1,499 விலையில் மெட்டாலிக் பாடி, டியூரபிள் கிளாஸ் போன்ற ரக்கட் டிசைனில் ப்ளூடூத் காலிங், 600mAh பேட்டரி, ஹெல்த் டிராக்கிங் போன்ற பக்கா அம்சங்களுடன் ஃபயர் போல்ட் ஆர்மர் (Fire-Boltt Armour) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

ஃபயர் போல்ட் ஆர்மர் அம்சங்கள் (Fire Boltt Armour Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் ரக்கட் டிசைன் (Rugged Design) கொண்டிருக்கிறது. ஆகவே, மெட்டல் கேஸ் (Metal Case) மற்றும் டியூரபிள் கிளாஸ் (Durable Glass) கொண்டுள்ளது. அதோடு ரோடேட்டிங் கிரவுன் (Rotating Crown) மற்றும் பவர் பட்டன் (Power Button) வருகிறது.

ரூ.1,499 பட்ஜெட்ல METAL பாடி.. 600mAh பேட்டரி.. HD டிஸ்பிளே வாட்ச்?

இந்த வாட்ச்சில் 1.6 இன்ச் (400 x 400 பிக்சல்கள்) ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always-on Display) கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு எச்டி (HD) டிஸ்பிளேவாகும். அதில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆகவே, அவுட்டோரில் டிஸ்பிளே அவுட்புட் பக்காவாக இருக்கும். மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் (Multiple Watch Faces) மற்றும் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருகிறது.

ஆகவே, இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் (Inbuilt Mic & Speaker) முதல் கால் ஹிஸ்டரி (Call History), குயிக் டயல் பேட் (Quick Dial Pad) மற்றும் சிங்க் கான்டாக்ட்ஸ் (Sync Contacts) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபயர் போல்ட் ஆர்மர் ஸ்மார்ட்வாட்ச்சில் மிரட்டலான பேட்டரி சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

முழுதாக 600mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் கிளாக் மோடில் (Classic Mode) 8 நாட்களுக்கு பேக்கப் பெறலாம். அதேபோல ப்ளூடூத் காலிங் மோடில் (Bluetooth Calling Mode) 5 நாட்களுக்கும், ஸ்டான்பை மோடில் (Standby mode) தொடர்ந்து 25 நாட்களுக்கும் பேக்கப் பெற்று கொள்ளலாம்.

ரூ.1,499 பட்ஜெட்ல METAL பாடி.. 600mAh பேட்டரி.. HD டிஸ்பிளே வாட்ச்?

ஆகவே, பேட்டரி பேக்கப் தொடர்பான கவலையே ஃபயர் போல்ட் ஆர்மர் மாடலில் இருக்காது. இந்த வாட்ச்சில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலிங் கன்ட்ரோல் மற்றும் அலாரம் செட்டிங் போன்றவற்றை செய்து கொள்ளலாம். மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) வருகின்றன.

இந்த வாட்ச்சில் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire Boltt Health Suite) வருகிறது. ஆகவே, எஸ்பிஓ2 டிராக்கிங் (SpO2 Tracking), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) மற்றும் வுமன் ஹெல்த் டிராக்கிங் (Women Health Tracking) ஆகியவற்றின் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபயர் போல்ட் ஆர்மர் ரக்கட் வாட்ச்சில் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது. ஆகவே, மிரட்டலான அவுட்டோர் யூசேஜ் சப்போர்ட் கொடுக்கக்கூடியது. இதில் டிரிங் வாட்டர் ரீமைண்டர் (Drink Water Reminder) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sedentary Reminder) வருகிறது.

இந்த ஆர்மர் அவுட்டோர் ஸ்மார்ட்வாட்ச்சில் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notifications) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ஸ்டாப்வாட்ச் (Stopwatch) மற்றும் அலாரம் (Alarm) ஆகியவை வருகின்றன. அதோடு மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல் (Music & Camera Control) சப்போர்ட் வருகிறது.

ரூ.1,499 பட்ஜெட்ல METAL பாடி.. 600mAh பேட்டரி.. HD டிஸ்பிளே வாட்ச்?

பிளாக் (Black), கேமோ பிளாக் (Camo Black), கிரீன் (Green), கோல்டு பிளாக் (Gold Black) மற்றும் சில்வர் கிரீன் (Silver Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை வெறும் ரூ.1,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire Boltt Armour Rugged Smartwatch With Bluetooth Calling Sale on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X