Home
Gadgets

உலகில் முதல்முறையாக யூஎஸ்பி டைப் சி போர்ட் வசதியுடன் கூடிய மியூசிக் பிளேயர்.!

மியூசிக் பிளேயர் கட்ந்த 2016ஆம் ஆண்டு வெளியான எம்3 என்ற மியூசிக் பிளேயரின் அடுத்த தயாரிப்பு

By Siva Lingam

இந்தியாவில் ஹை ரெசலூசன் மியூசிக் பிளேயர் ஒன்றை ஃபைலோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எம் 7 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மியூசிக் பிளேயர் கட்ந்த 2016ஆம் ஆண்டு வெளியான எம்3 என்ற மியூசிக் பிளேயரின் அடுத்த தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு, சில்வர் மற்றும் சிகப்பு ஆகிய வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த மியூசிக் பிளேயரின் விலை ரூ.19.990 ஆகும். இந்த சாதனம் ஃபைலோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம், இகாமர்ஸ் இணையதளங்கள், மற்றும் ரீடெயில் ஷோரூம்களில் கிடைக்கும்.

உலகில் முதல்முறையாக யூஎஸ்பி  டைப் சி வசதியுடன் கூடிய மியூசிக் பிளேயர்.

இந்த ஃபைலோ எம்7 மியூசிக் பிளேயர் 3.2 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவை கொண்டது. இதன் ரெசலூசன் 480 x 800 பிக்சல்ஸ் ஆகும். அலுமினியம் உலோகத்தால் செய்யப்பட்டுள்ள இந்த சாதனத்தின் முன்பக்கம் கண்ணாடியால் ஆனது. இந்த சாதனம் 2ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. மேலும் ஸ்டோரேஜை 512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் நீட்டித்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு முறையில் இயங்கும் இந்த சாதனத்தின் வால்யும் கண்ட்ரோலை பட்டன்கள் மூலம் அதிகப்படுத்தி கொள்ளவோ குறைத்து கொள்ளவோ செய்யலாம்


மேலும் இந்த சாதனத்தில் சாம்சங் நிறுவனத்தின் எக்ஸினோஸ் 7270 எஸ்.ஓ.சி அமைந்துள்ளது. இந்த மியூசிக் பிளேயரில் 1180mAh உள்ளதால் இதன் பேட்டரி நாற்பது நாட்களுக்கு நிற்கும். ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் சுமார் 30 மணி நேரம் புளூடூத் மூலம் பயன்படுத்தலாம். அதேசமயம் ஹெட்போன் மூலம் கனெக்ட் செய்தால் 20 மணி நேரம் பாடல்கள் கேட்கலாம்.


மேலும் யூஎ|ஸ்பி டைப் போர்ட் சி மூலம் சார்ஜ் செய்யப்படும் முதல் மியூசிக் பிளேயர் இதுதான். யூஎஸ்பி சி ஹெட்போன் மூலம் சார்ஜ் செய்வது, பாடல்களை கேட்பது போன்றவைகளை செய்யலாம். டைப் சி போர்ட் என்பது கம்பெனி கொடுத்ஹ 3.5மிமீ ஜாக் ஆகும். இந்த .3.5 மிமீ ஜாக் இந்த மியூசிக் பிளேயருக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.


இந்த எம்7 மியூசிக் பிளேயரில் 192kHz/ 24 பிட் பிசிஎம் ஆடியோ சப்போர்ட் செய்யும். மேலும் இந்த பிளேயரில் APE/ WAV/ FLAC/ AIF/ DSD/ M4A/ WMA/ OGG/ AAC/ ALAC/ MP3 போன்ற பார்மேட்டில் உள்ள பைல்களும் சப்போர்ட் செய்யும். அதுமட்டுமின்றி CUE கோடிக் உள்பட அனைத்துவித ஃபைல்களும் இதில் சப்போர்ட் ஆகும்.


மேலும் இந்த எம் 7 பிளேயரில் இஎஸ்.எஸ் சாப்ரே 9018 சிம் பயன்படுத்தப்படுகிறது. அதோடு இதில் டிஏசி ஹெட்போன் ஆம்ப்ளிஃபையருடன் கூடிய ஒரு கம்பாக்ட் பெட்டியும் உள்ளது. இந்த 9018 சிப் வெளிச்சத்ததை குறைக்க உதவுகிறது. மேலும் 384kHz/32 பிட் பிசிஎம் டிராக்ஸ் வசதியும் இதில் உண்டு.

உலகில் முதல்முறையாக யூஎஸ்பி  டைப் சி வசதியுடன் கூடிய மியூசிக் பிளேயர்.

மேலும் இந்த எம்7 மியூசிக் பிளேயர் எச்டி ஆடியோ கோடிக் சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சோனியின் எல்.டி.ஏசி வயர்லெஸ் ஆடியோ கோடிக் இதில் உண்டு. மேலும் இந்த சாதனம் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ போன்களிலும் சப்போர்ட் செய்யும். மேலும் இந்த மியூசிக் பிளேயர் மூலம் எப்.எம் ரேடியோவையும் கேட்டு ரசிக்கலாம். ஆனால் ஒரே ஒரு குறையாக வைபை மூலம் ஆப்பிள் மியூசிக், கூகுள் பிளே மியூசிக் ஆகியவை சப்போர்ட் செய்யாது.

Best Mobiles in India

English summary
Fiio launches world's first music player with USB Type-C port: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X