ஓல்ட் இஸ் கோல்டு.. பழைய பாடல் கேஸட் உங்ககிட்ட இருக்கா? அப்போ இந்த குட்டி டைம் டிராவல் மெஷின் உங்களுக்கானது..
ஓல்ட் இஸ் கோல்டு என்பார்கள், அப்படி பழமைக்கு புதுமை சேர்க்கும் விதமாக ஒரு புதிய சாதனத்தை ஃபியோ (FiiO) என்ற பிராண்ட் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் பழைய வாக்மன் டேப்ரெகார்டர் போன்றது, ஆனால் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சாதனம் பார்ப்பதற்கு பழைய வாக்மேன் (Old Walkman) டைப்பில் இருக்கிறது என்றாலும், இதன் அம்சங்கள் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என்று ஃபியோ பிராண்ட் தெரிவித்துள்ளது. ஃபியோ பிராண்ட் இந்த புதிய சாதனத்தை ஃபியோ சிபி13 போர்ட்டபிள் ஸ்டீரியோ கேஸட் பிளேயர் (FiiO CP13 portable stereo cassette player) என்ற பெயருடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஃபியோ சிபி13 போர்ட்டபிள் ஸ்டீரியோ கேஸட் பிளேயர் (FiiO CP13 portable stereo cassette player):
இந்த சாதனம் வின்டேஜ் டைப் அனலாக் சவுண்ட் (vintage type analog sound) அம்சத்தை கொண்ட கேசட்கள் (cassette) மூலம் பாடல்களை பிளே செய்ய கூடிய திறன் கொண்டவை என்று கூறப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல போனால், பழைய கேசட்கள் மூலம் பாடல்களை கேட்க விருப்பும் பாடல் விரும்பிகளுக்கு இந்த ஃபியோ சிபி13 போர்ட்டபிள் ஸ்டீரியோ கேஸட் பிளேயர் ஒரு டைம் டிராவல் மெஷின் என்று கூட நாம் கூறலாம்.
நாஸ்டாலிஜிக் (nostalgia) ஃபீலிங்கை வழங்கும் இந்த சாதனத்திற்கு இப்போதே மவுசு எகுறுகிறது. பழைய வாக்மேன் சாதனத்தை புதிய தொழில்நுட்பத்துடன் ரெட்ரோ பியூச்சர்ஸ்டிக் டிசைனில் வழங்கி அசத்தியிருக்கிறது ஃபியோ நிறுவனம். இந்த FiiO CP13 portable stereo cassette player சாதனம் ஹை-வோல்ட்டேஜ் மோட்டார் பவர் சப்ளை (high-voltage motor power supply) மற்றும் பியோர் அனலாக் சவுண்ட் (pure analog sound) உடன் வருகிறது.
இந்த சாதனம் ஓவர் சைசுடு காப்பர் ஃபிளைவீல் உடன் கிளாசிக் JRC5532 ஆப்-ஆம்ப் ( op-amp) உடன் மிகவும் சூப்பரான ஆடியோ குவாலிட்டியை வழங்குகிறது. இந்த CP13 போர்ட்டபிள் ஸ்டீரியோ கேஸட் பிளேயர் 13 மணி நேரத்திற்கு மேலான பேட்டரி (battery) ஆயுள் பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது டூயல் மோட் பவர் உடன் அலுமினியம் சேசிஸ் உடன் உறுதியான மற்றும் ஸ்டைலிஷ் அமைப்பை கொண்டுள்ளது.

எவ்வளவு நேர பிளேபேக் பேட்டரி நேரத்தை இது வழங்கும்:
இந்த ஃபியோ சிபி13 போர்ட்டபிள் ஸ்டீரியோ கேஸட் பிளேயர் மிகவும் துல்லியமான அதே பழைய கால அனலாக்-ஆடியோ அம்சத்தை 100% வழங்குகிறது. இந்த சாதனத்தில் நிறுவனம் 1800mAh பேட்டரியுடன் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் ஆதரவுடன் வழங்குகிறது. இந்த சந்தானத்திற்கு ஃபியோ நிறுவனம் பிரத்தியேகமான ஃபியோ சேஃப் சார்ஜிங் சர்கியூட்ஸ் (FiiO's safe charging circuits) உடன் வருகிறது.
இது இப்போது ஸ்கை ப்ளூ (Sky blue) மற்றும் வைட் அண்ட் பிளாக் (White and black) நிறத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஃபியோ CP13 போர்ட்டபிள் ஸ்டீரியோ கேஸட் பிளேயர் சாதனம் ஹெட்போன் ஜோன் (Headphone Zone) வலைப்பக்கம் வழியாக வெறும் ரூ.9999 விலையில் விற்பனைக்கு இப்போது வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய வாக்மேன் சாதனங்களை மக்கள் அன்றைய காலகட்டத்தில் வெறும் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் கொடுத்து வாங்கி பாடல்கள் கேட்டு மகிழ்ந்த காலம் இப்போது மலையேறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் வின்டேஜ் என்ற பெயரில் வாக்மேன் சாதனத்தை இப்போது 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதை பார்க்க நமக்கு வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications