ஆப்பிள் நிறுவனம் மறக்க நினைக்கும் 5 தோல்வியடைந்த தயாரிப்புகள்

By Siva
|

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஐபோட் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பை பெற்று அந்நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை கொடுத்த போதிலும், ஆப்பிள் நிறுவனத்திற்கு அதே அளவு தோல்வியை தந்த தயாரிப்புகளும் உள்ளன. வெற்றி தோல்வி என்பது ஆப்பிள் நிறுவனமும் சந்தித்த ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் மறக்க நினைக்கும் அந்த தோல்வி அடைந்த தயாரிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்

ஆப்பிள் லிசா (Apple Lisa)

ஆப்பிள் லிசா (Apple Lisa)

கடந்த 1983 முதல் 1986 வரை வெளிவந்த இந்த லிசா, ஆப்பிள் நிறுவனரின் மகளான லிசா பெயரை தாங்கி வெளிவந்தது. ஆப்பிள் நிறுவனம் லிசாவை தொடங்கிய அதே ஆண்டுதான் இந்த புரொஜக்ட் ஆரம்பம் ஆனது என்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டது. இந்த தயாரிப்பு லோக்கல் சாப்ட்வேர் கொண்டு மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அந்த காலத்திலேயே இதன் விலை $10,000 என்பதால் வசதி படைத்தோர் கூட இதன் அதிக விலை காரணமாக வாங்க யோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் III

ஆப்பிள் III

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் படுதோல்வி தயாரிப்பு இதுதான். இதன் டிசைன், ஆப்பரேட்டிங் சிஸ்டமான DOS 3.2 மற்றும் 3.3 ஆகியவை சுத்தமாக வாடிக்கையாளர்களை கவரவில்லை. இந்த தயாரிப்பின் தோல்வி ஆப்பிள் நிறுவனத்திற்கு பொருளாதார நெருக்கடியை உண்டாக்கியது.

ஆபாச வலைதங்களில் இருக்கும் போது ஏன் பேஸ்புக்கை லாக்-அவுட் செய்ய வேண்டும்.?

ROKR:

ROKR:

மொபைல் மார்க்கெட் சூடு பிடிக்க தொடங்கியவுடன் ஆப்பிள் நிறுவனம் முதலில் மொட்டோரோலா நிறுவனத்துடன் கைகோர்த்து தயாரித்த போன் தான் இந்த ROKR. ஆனால் இந்த போன் விளம்பரத்தில் கூறியபடி மியூசிக் பிளே ஆகவில்லை. மேலும் இந்த போனில் வெறும் 1GB மெமரி மட்டுமே இருந்ததால் மியூசிக்கை டவுன்லோடு செய்ய போதுமான இடமும் இல்லை. எனவே வாடிக்கையாளர்கள் இந்த மொபைல் போனை ஒதுக்க தொடங்கினர்

ஆப்பிள் மெஷிண்டோஷ் போர்ட்டபிள்:

ஆப்பிள் மெஷிண்டோஷ் போர்ட்டபிள்:

இந்த உபகரணம் கடந்த 1989ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியானது. போர்ட்டபிள் என்று இதன் பெயரில் இருந்தாலும் இதன் எடை சுமார் 7 கிலோ. எனவே எளிதில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் இதன் இலை $6500 ஆக இருந்தது. அந்த காலத்தில் இதன் விலையை விட கம்ப்யூட்டரின் விலையே குறைவு என்பதால் மக்களிடம் இந்த உபகரணம் எடுபடவில்லை. மேலும் இதன் மிகக்குறைந்த அவுட்புட் பவர்சப்ளையும் இந்த உபகரணத்தின் தோல்விக்கு இன்னொரு காரணம்

ஆப்பிள் பேண்டேய் பிப்பின் (Apple Bandai Pippin)

ஆப்பிள் பேண்டேய் பிப்பின் (Apple Bandai Pippin)

ஆப்பிள் நிறுவனத்தின் கேம் உபகரணமான இது கடந்த 1995ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் நிடெண்டோ, சேகா, மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர் கேம்ஸ்கள் இருந்தன. ஆனால் இதன் இலை $600 என்பதால் யாரும் இதன் பக்கத்தில் எட்டி கூட பார்க்கவில்லை. இந்த உபகரணம் உலகம் முழுவதும் வெறும் 40,000 மட்டுமே விற்பனையானதால் அதோடு இழுத்து மூடப்பட்டுவிட்டது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Even though the Cupertino-based Apple has been viewed as the company of perfection, they also have some failures which are not pretty much popular.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more