Home
Gadgets

குறைந்த விலையில் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புதிய Fastrack ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

இந்தியாவில் Fastrack நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளன. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஃபாஸ்ட்ராக் நிறுவனம்.

அதாவது புதிய ரெவோல்ட் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை பிளிப்கார்ட் உடன் இணைந்து வெளியிட்டுள்ளது ஃபாஸ்ட்ராக் நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஃபாஸ்ட்ராக் ரெவோல்ட் FS1 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

குறைந்த விலையில் புதிய Fastrack ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

ஃபாஸ்ட்ராக் ரெவோல்ட் FS1 அம்சங்கள்: ஃபாஸ்ட்ராக் ரெவோல்ட் FS1 ஸ்மார்ட்வாட்ச் 1.83-இன்ச் அல்ட்ராவியு டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ப்ளூடூத் காலிங், 200-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. பின்பு 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம்.

அதேபோல் ஸ்டிரெஸ் மாணிட்டரிங், ஆட்டோ ஸ்லீப் டிராக்கிங், 24x7 ஹார்ட் ரேட் மாணிட்டரிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல். பின்பு ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல வசதிகளை வழங்குகிறது ஃபாஸ்ட்ராக் ரெவோல்ட் FS1 ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

குறைந்த விலையில் புதிய Fastrack ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

குறிப்பாக ஃபாஸ்ட்ராக் ரெவோல்ட் FS1 ஸ்மார்ட்வாட்ச் மாடல் 2.5x நைட்ரோஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் சீரான கனெக்டிவிட்டி, அதிவேக செயல்திறன் வழங்கும் வகையில் மேம்பட்ட சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை வழங்குகிறது. குறிப்பாக மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது இந்த புதியஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

புதிய ஃபாஸ்ட்ராக் ரெவோல்ட் FS1 மாடல் ரூ. 1695 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது மார்ச் வரும் 22-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை பிளிப்கார்ட் மற்றும் ஃபாஸ்டிராக் தளத்தில் வாங்க முடியும். அதேபோல் சமீபத்தில் அமேஸ்ஃபிட் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இப்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி அம்சங்கள்:அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.28-இன்ச் (416×416 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வலதுபுறம் இருக்கும் வட்ட வடிவ டயல் கொண்டு மெனு மற்றும் இதர ஆப்ஷன்களை இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புளூடூத் 5.2 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் மாடல். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் துல்லியமான GPS கண்காணிப்பு திறன் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் ஆனது 280 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பேட்டரி சேவிங் மோடில் அதிகபட்சம் 20 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை வழங்குகிறது. இதுதவிர ஹார்ட் ரேட் மாணிட்டரிங், ஸ்டிரெஸ் லெவல் மேப்பிங், SpO2, 5 satellite positioning systems, BioTracker PPG ஆப்டிகல் சென்சார் உள்ளிட்ட வியக்க வைக்கும் அம்சங்களுடன் இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

குறைந்த விலையில் புதிய Fastrack ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

குறிப்பாக 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். பின்பு கேமரா கண்ட்ரோல் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதியைக் கொண்டுள்ளது அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச். இந்தியாவில் அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.10.999-ஆக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அமேசான் தளத்தில் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fastrack Revoltt FS1 with 1.83-inch display Launched in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X