ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் - கை சைகை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்மார்ட் பேண்ட்

என்ற விளம்பரத்துடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. நம் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பேணிக்காக்க பல சிறப்பம்சங்களுடன்

|

ஃபாஸ்ட்ராக் நிறுவனமானது தனது மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பேண்ட்-ஐ இந்திய சந்தையில், உலகின் மிகவும் மெல்லிதான ஸ்மார்ட் பேண்ட் என்ற விளம்பரத்துடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. நம் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பேணிக்காக்க பல சிறப்பம்சங்களுடன்

ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ்-கை சைகை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய பேண்ட்

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் சந்தை விலை ரூ.4995 ஆகும். நம் கிஸ்போட்டிலும், ஒரு ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் ஸ்மார்ட் பேண்ட்-ஐ ஆய்வுக்காக பெற்றோம். அதனை ஒரு வாரம் உபயோகித்து பார்த்து அதன் நிறை குறைகளை தொகுத்துளோம். வாருங்கள் அதை பற்றி தெளிவாக காணலாம்.

திரை மற்றும் ஸ்மார்ட் வாட்ச் தரம் :

திரை மற்றும் ஸ்மார்ட் வாட்ச் தரம் :

நாம் உபயோகித்த ஸ்மார்ட் பேண்ட்களிலேயே ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் ஸ்மார்ட் பேண்ட் ஆனது மிகவும் எடை குறைவானதாக உள்ளது. அதே சமயத்தில் கையில் அணிவதற்கும் மிகவும் ஏதுவாக உள்ளது. சியோமி பேண்டை போலவே இதன் வாரினை நம்மால் தனியாக கழற்றிக்கொள்ள முடியும், எனவே விசேஷங்களுக்கு தகுந்தவாறு நம்மால் பல வண்ணங்களில் விதவிதமாக வாரினை மாற்றிஅணிந்துகொள்ளலாம்.

ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ்

ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ்

ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ், தரமான பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் IP67 தரத்துடனும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் பேண்ட் தண்ணீரில் 3 அடி ஆழத்தில் 30 நிமிடம் வரை தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது.இதன் தடிமன் வெறும் 9 மில்லிமீட்டர் மட்டுமே, அதேசமயம், இதன் திரையில் எந்தவொரு பொத்தானும் இல்லை. நம் கை அசைவின் மூலமாக இந்த பேண்டை கட்டுப்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட் பேண்டில் OLED திரை பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல சூரிய வெளிச்சத்திலும் நம்மால் திரையில் தெரியும் அறிவிப்புகளை தெளிவாக காண முடிகிறது,

இதன் இனொமொரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதனை சார்ஜ் செய்ய மற்ற ஸ்மார்ட் பேண்ட்-ஐ போல், வாரினை தனியாக கழற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதன் two pin dock அமைப்பு மூலம் நம்மால் வாரினை பிரித்து எடுக்காமலேயே சார்ஜ் செய்ய முடியும்.

சைகையின் மூலம் கட்டுப்படுத்தலாம்:

சைகையின் மூலம் கட்டுப்படுத்தலாம்:

ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் ஸ்மார்ட் பேண்டை நம் மணிக்கட்டை திருப்புவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்த முறையை பயன்படுத்தி நம்மால் பாட்டு மாற்ற, புகைப்படம் எடுக்க மற்றும் அழைப்புகளை நிராகரிக்க முடியும்.
இதன் திரை மிகவும் எளிதாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்மால் இந்த ஸ்மார்ட் பேண்டை நமது மொபைல் போனுடன் இணைத்துக்கொள்ள முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்றை ஒன்று ரிஃப்ளெக்ஸ் வேவ் ஆப்பை நம் மொபைலில் பதிவிறக்கம் செய்து
கொள்வது. பதிவிறக்கம் செய்த பின்பு ஸ்மார்ட் பேண்டுடன் மிகக்குறைவான நேரத்தில் இணைந்துவிடுகிறது. ஒரு முறை இணைத்துவிட்டவுடன், குறுஞ்ச்செய்தி, வானிலை அறிக்கை, மொபைலை ரிங்க்டோன் மூலம் கண்டறிவது மற்றும் பல சிறப்பம்சங்கள் தானாக செயல்பட தொடங்கிவிடுகின்றன.

9 மில்லிமீட்டர் தடிமன்

9 மில்லிமீட்டர் தடிமன்

9 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் ஸ்மார்ட் பேண்ட் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி நம்மால் பாட்டுக்களை மாற்ற, புகைப்படம் எடுக்க மற்றும் அழைப்புகளை நிராகரிக்க முடியும். இதை தவிர, இதன் ஸ்க்ரோலிங் அறிவிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் நம்மால் மொபைலை வெளியே எடுக்காமலேயே மொபைலுக்கு வரும் செய்திகளை
உடனுக்குடனே அறிந்துகொள்ள முடிகிறது.

அத்துடன் மட்டுமில்லாமல், 24 மணி நேர உறக்க கண்காணிப்பு, நீண்ட நேரம் எந்த உடல் செயல்பாடும் இல்லாமல் இருக்கும் பொது எச்சரிக்கை செய்வது, நடந்த தூரத்தை கணக்கிடுவது, மொபைலை தவறுதலாக வைத்துவிட்டால் அதை கண்டுபிடிக்க உதவுவது போன்ற பல
சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இதன் ஒரே குறை என்னவென்றால், இதனுடன் இதய துடிப்பு கண்காணிப்பு வருவதில்லை. தற்போது சந்தையில் இதனை விட மலிவே விலை ஸ்மார்ட் பேண்ட் நிறுவங்களே இதய துடிப்பு கண்காணிப்பு கருவியுடன் வரும் பொழுது, இதில் அது இல்லாதது ஒரு குறையாகவே தெரிகிறது.

செயல்திறன்:

செயல்திறன்:

ஒரு வார நீண்ட உபயோகத்திற்கு பிறகு, இதன் நேர் மற்றும் எதிர்மறை செயல்கள் நன்றாகவே புலப்பட தொடங்கியது. இந்த ஃபிட்னெஸ் ட்ராக்கர், மொபைல் அழைப்பு போன்ற அணைத்து விதமான எச்சரிக்கைகளையும் நமக்கு தெரிவிக்கிறது. இது எச்சரிக்கையை சிறு அதிர்வின்(vibration) மூலம் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் ஒரு கூட்டமான இடத்திலோ, வாகன நெரிசல் மிகுந்த இடத்திலோ அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும்

பொழுதோ, இந்த அதிர்வு போதுமானதாக இல்லை. இதனால், நிறைய நேரங்களில் அறிவிப்புகளை தவற விட வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதன் தொடுதிரை மிகசிறப்பின முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், நம்மால் இதனுடன் தொடர்புகொள்வது மிகவும் எளிதாக உள்ளது.

பேட்டரியின் திறன்:

பேட்டரியின் திறன்:

ஃபாஸ்ட்ராக் நிறுவனம் தனது ரிஃப்ளெக்ஸ் வேவ் ஸ்மார்ட் பேண்டில் 3 மில்லிமீட்டர் தடிமனில் பேட்டரி ஒன்றை நிறுவியுள்ளது. கை சைகை கட்டுப்பாடை பயன்படுத்தும்பொது, பேட்டரி 5 நாட்களுக்கு தாக்குபிடிக்கிறது. அந்த பயன்பாட்டை முடக்கினால், 5 நாட்களுக்கும் மேல் பேட்டரி திறம்பட செயல்படுகிறது.
ஃபாஸ்ட்ராக் நிறுவனத்தின் கூற்றுப்படி, ரிஃப்ளெக்ஸ் வேவ் ஸ்மார்ட் பேண்டை 0- லிருந்து 100 - வரை முழுவதும் சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் மற்றும் 15 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.


எந்த வகை போனுடன் உபயோகிக்கலாம்?
ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் ஸ்மார்ட் பேண்டை நாம் ஆண்ட்ராய்டு மாறும் ஆப்பிள் மொபைல்களுடன் பயப்படுத்தலம். நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, ரிஃப்ளெக்ஸ் வேவ் ஆப்பை கூகிள் பிளேஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப்ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இரண்டு ஸ்டோர்களிலிலும், இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

என்ன செய்யலாம்? வாங்கலாமா?

என்ன செய்யலாம்? வாங்கலாமா?

மொத்தத்தில், நிறைய சிறப்பம்சங்களை ரிஃப்ளெக்ஸ் வேவ் ஸ்மார்ட் பேண்ட் கொண்டுள்ளது. சிறப்பான வடிவமைப்பு, கை சைகை கட்டுப்பாடு போன்ற பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், குறைகள் இருக்கவே செய்கின்றன. இதன் மிக பெரிய குறை இதய கண்காணிப்பு கருவி இல்லாதது.

ஃபாஸ்ட்ராக் நிறுவனம் தனது ரிஃப்ளெக்ஸ் வேவ் பேண்டிற்கு வெறும் IP67 தரத்தை வழங்கியுள்ளது, ஆனால் மற்ற நிறுவனங்களான சியோமி, ஹானர் போன்றவை IP68 தரத்துடன் இதனை விட மலிவான விலையில் ஸ்மார்ட் பேண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
அதேபோல், முன்னே கூறியுள்ளதுபடி, இதன் அதிர்வு எச்சரிக்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. உங்களுக்கு மேற்க்கூறிய பிரச்சனைகள் பெரிதாக தெரியவில்லையென்றால் இந்த ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் ஸ்மார்ட் பேண்ட் உங்களுக்கு சிறந்த ஒரு தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Fastrack Reflex Wav review A decent gesture-controlled smart band: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X