பின்றானே இவன்.. AMOLED டிஸ்பிளே.. IP68 ரேட்டிங்.. AI சாட்டிங்.. புது Fastrack வாட்ச்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஃபாஸ்ட்ராக் காஸ்மிக்ஸ் (Fastrack Cosmix Smartwatch) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 24 மணி நேர ஹெல்த் சூட் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, IP68 ரேட்டிங், ஏஐ சாட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. காஸ்மிக் கேஸ் டிசைனில் பிரீமியமாக இருக்கும் இந்த ஃபாஸ்ட்ராக் காஸ்மிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களை அதைவிட மலிவான விலைக்கு கொடுப்பது கூடுதல் வரவேற்பை பெற்று தந்துள்ளது. இப்போது, காஸ்மிக் டிரைவ் கேஸ் டிசைனில் இந்த புது ஃபாஸ்ட்ராக் காஸ்மிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் களமிறங்கி இருக்கிறது.

அதாவது, விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட் போன்ற ஏரோடைனாமிக் கர்வ்களுடன் கூடிய கேஸ் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப யுஐ பில்ட் செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு மெட்டல் ஃபிரேம் (Metal Frame), அமோலெட் டிஸ்பிளே, ஃபுல் பட்டன் நேவிகேஷன் போன்றவை கிடைக்கின்றன. ஏஐ பீச்சர்களையும் கொடுக்கிறது. முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஃபாஸ்ட்ராக் காஸ்மிக்ஸ் அம்சங்கள் (Fastrack Cosmix Specifications): இந்த ஃபாஸ்ட்ராக் மாடலில் 1.32 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ரவுண்ட் டயல் (Round Dial) டிசைனை கொடுக்கும். இருப்பினும், கேஸ் ஹெல்மெட் போன்ற கர்வ்ட் லுக் கொடுக்கும். இதில் 11 எம்எம் கேஸ் தடிமன் இருக்கும். ஃபுஸ் பட்டன் கன்ட்ரோல் கிடைக்கிறது.
ஆகவே, மல்டிபிள் மெனு லோய்அவுட்கள் (Multiple Menu Layouts) கிடைக்கும். இதை நேவிகேட் செய்து கன்ட்ரோல்களை அணுகலாம். காஸ்மிக் ஸ்டைலில் யுஐ கொடுக்கும்படி நியான்-க்ளோவ் யுஐ (Neon-glow UI) கிடைக்கிறது. ப்ளூயிட் டிரான்சிசன்ஸ் (Fluid Transitions) கிடைக்கிறது. ஏஐ மூலமாக ஜெனரேட் செய்யப்பட்ட வாட்ச் பேஸ்கள் (Watchfaces) கிடைக்கிறது.
ஏஐ சாட்பாட் (AI Chatbot) சப்போர்ட் கிடைக்கிறது. இதற்கான சாட்ஜிபிடி இன்டிகிரேஷன் (ChatGPT Integration) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃபாஸ்ட்ராக் காஸ்மிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கிடைக்கிறது. ஆகவே, இன்-பிலிட் மைக் (In-built Mic) மற்றும் ஸ்பீக்கரை (Speaker) பயன்படுத்தி கொள்ளலாம்.
24 மணி நேரமும் மானிட்டர் மற்றும் டிராக் செய்து கொள்ளும்படி ஹெல் சூட் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) கிடைக்கிறது. மேலும், ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கிங் (Activity Tracking) கிடைக்கிறது. 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கிடைக்கின்றன.
இந்த ஆக்டிவிட்டிகளை தெரிந்து கொள்ள ஸ்மார்ட் போர்ட் டாஸ்போர்ட் (Smart Board Dashboard) கிடைக்கிறது. 256 எம்பி மெமரி கிடைக்கிறது. இந்த ஃபாஸ்ட்ராக் காஸ்மிக்ஸ் மாடலில் கால்குலேட்டர் (Calculator), கேம்ஸ் (Games), அலாரம் (Alarm), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), டைமர் (Timer) போன்ற கூடுதல் பீச்சர்களும் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போனில் இருந்தும் சார்ஜ் செய்ய முடியும்.
இந்த ஃபாஸ்ட்ராக் காஸ்மிக்ஸ் மாடலில் IP68 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வருகிறது. ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black), காப்பர் கிளேய் (Copper Clay) மற்றும் கிரானைட் கிரே (Granite Grey) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. ரூ.6,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான், ஃபாஸ்ட்ராக் தளங்களில் ஆர்டர் செய்யலாம். ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








