Home
Gadgets

எல்ஜி வாஷர் ட்ரையர்களை கொண்டு சலவை மற்றும் உலர்த்துவதற்கான புதிய வழியை அனுபவிக்கவும்!

எல்ஜி வாஷர் ட்ரையர்கள்: சலவை மற்றும் உலர்த்துவதற்கான புதிய வழி!

பருவமழை மற்றும் குளிர்காலத்தில் துணிகளை உலர்த்துவதில் உள்ள சிக்கல்களை மற்றும் அதனால் ஏற்படும் விரக்தியை நாம் அனைவரும் நன்கு அறிவோம்; அனுபவித்தும் இருப்ப்போம். ஒரு கணம் சூரியன் அதன் அனைத்து மகிமையையும் காட்டி சுட்டெரிக்கும். அடுத்த கணம்மே முழு பலத்துடன் மழை பெய்யும். உடனே வெளியே காயப்போட்ட அனைத்து துணிகளையும் வீட்டிற்க்கு உள்ளே கொண்டு வந்து, ஜன்னல் அல்லது ஸ்டாண்ட் என கிடைக்கும் இடங்களில் காய வைப்போம். இதுவே குளிர்காலமாக இருந்தால் ஆடைகள் முழுவதுமாக உலர ஒரு நாள் முழுவதும் எடுக்கும்.

இதுபோன்ற சிக்கல்களை சந்திக்காமல், துணிகளை உலர்த்துவதற்கு எளிதான மற்றும் வசதியான ஒரு வழி இருக்கிறது என்றால்.. கணிக்க முடியாத இந்திய வானிலை நிலைமைகளால் துணிகளை அங்குமிங்குமாய் தூக்கிக்கொண்டு ஓடும் வேலைகளை காணாமல் அடிக்க ஒரு வழி இருக்கிறது என்றால்.. அது எல்ஜி ஃப்ரண்ட் லோட் வாஷர் ட்ரையர் தான். இது துணிகளை சலவை செய்ய மற்றும் அவைகளை உலர்த்துவதற்கான புதிய வழியாகும். உங்கள் விலையுயர்ந்த ஆடைகளின் துணியை பாதுகாக்கும் அதே வேளையில், உங்கள் தினசரி சலவை வழக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சரியான ஆல்-இன்-ஒன் இயந்திரம் இதுவாகும். ஒரு வாஷர்-ட்ரையரை சொந்தமாக வைத்திருப்பதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகளை கிடைக்கும்என்பதை பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

இதுகுறித்த விவரங்களுக்குள் நாம் மூழ்குவதற்கு முன், எல்ஜி-யின் வாஷர் ட்ரையர் ரேஞ்ச் உங்கள் தினசரி சலவை அமர்வுக்கு எப்படி வசதியை சேர்கிறது என்பதை பற்றிய ஒரு சுருக்கமான பார்வை:

வசதி என்பது தான் இந்த விளையாட்டின் பெயர்!

எல்ஜி வாஷர் ட்ரையரை பயன்படுத்துவதன் வசதியை குறைத்து மதிப்பிட முடியாது. சலவை மற்றும் உலர்த்துவதற்கான எல்ஜி-யின் இந்த புதிய வழி பாரம்பரியமான சலவை இயந்திரத்தை விட மிகவும் வசதியானது. அழுக்கான உடைகளை இயந்திரத்தில் எறிந்துவிட்டு, டைமரை செட் செய்துவிட்டு, அதை மறந்துவிடலாம்! சலவை சுழற்சி முடிந்ததும், நீங்கள் தானாகவே உங்கள் சலவை இயந்திரத்தை உலர்த்த ஆரம்பிக்கலாம்.

அதாவது இது உங்கள் வீட்டிற்கு வெளியே துணிகளை கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை முற்றுலுமாக நீக்குகிறது. இது வலுவான காற்று, பறவைகளின் எச்சங்கள் மற்றும் விரும்பத்தகாத மழை ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகளை குறைக்கிறது. காயத்தை துணிகளை ஒரு ஸ்டாண்டில் அல்லது ஜன்னலில் தொங்கவிட வேண்டிய அவசியம் இனி இல்லை - வெறுமனே டைமரை அமைக்கவும், உட்கார்ந்து ஓய்வெடுக்கவும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வாஷர் ட்ரையரை வைக்க பெரிய அளவிலான இடமும் தேவைப்படாது.

எல்ஜியின் புதிய துணி துவைக்கும் மற்றும் உலர்த்தும் முறையானது இடத்தை சேமிக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் கிங் சைஸ் டிரம் ஒன்றை கொண்டிருக்கிறது. மேலும், உங்களது வீட்டில் துணி ஸ்டாண்ட் அமைக்கவோ அல்லது வெளியே துணிகளை ஒழுங்காக கட்டவோ இடம் தேவைப்படாது. எல்ஜி வாஷர் ட்ரையர் மற்றும் எ.கா தின்கியூ கம்பானியன் ஆப்பை வைத்திருப்பதன் மூலம் கூடுதலாக ஒரு நன்மை உள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் கிடைக்கும் எல்ஜியின் தின்கியூ ஆப் ஆனது வை-பை மூலம் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் உங்களது மெஷினை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாட்டை அனுமதிப்பதன் மூலம் அழுக்கு சலவைகளை கழுவுதல் மற்றும் உலர்த்துவது மிகவும் வசதியாகிறது. ஸ்மார்ட் ரிமோட் கன்ட்ரோல் பீச்சர் மூலம் இது இயக்கப்படுகிறது. கூடுதலாக, ஸ்மார்ட் டயக்னோசிஸ் ஆனது சிறிய சிக்கல்கள் பெரிய தடைகளாக மாறுவதற்கு முன்பு அவற்றை விரைவாக சரிசெய்ய அல்லது அடையாளம் காண உதவுகிறது. பின்னர் டவுன்லோட் சைக்கிள் உள்ளது, இது 20 கூடுதல் வாஷ் புரோகிராம்களை டவுன்லோட் செய்ய அனுமதிக்கிறது.

உங்களது சராசரி வாஷர் ட்ரையரை போல் கிடையாது!

எல்ஜியின் ஃப்ரண்ட் லோட் வாஷர் ட்ரையர் ஆனது ஏஐ திறன்களுடன் வருகிறது, இது துணி பாதுகாப்பை மேம்படுத்த கடந்த வாஷ் சுழற்சிகளிலிருந்து டேட்டாக்களை சேகரிக்கிறது. இதை ஏஐ டைரக்ட் டிரைவ் (டிடி) என்று எல்ஜி அழைக்கிறது, மேலும் இது பாரம்பரிய வாஷர் ட்ரையர்களை காட்டிலும் அதிக துணி பாதுகாப்பை வழங்குவதாக இருக்கிறது. எல்ஜியின் டர்போவாஷ் 360 பீச்சர், துணியை பாதுகாக்கும் அதே வேளையில், உங்கள் அழுக்கு சலவைகளை விரைவாக கழுவ வேண்டியிருக்கும் போது கிளட்ச் வந்துவிடுகிறது.

எல்ஜி ஃப்ரண்ட் லோட் வாஷர் ட்ரையர் அதன் நீராவி தொழில்நுட்பம் மூலம் நீட்டான மற்றும் நேர்த்தியான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது, இது உங்கள் துணிகளை துவைக்கும் போது சுருக்கங்களை குறைக்கிறது. கூடுதலாக, நீராவியின் வெப்பம் ஒவ்வாமை மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. எல்ஜியின் மெஷின் அதிக ஆற்றல் திறன் கொண்டது, நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆடைகளின் தரத்தை பாதுகாக்கிறது.

எல்ஜி அட்வான்டேஜ்!

எல்ஜி வாஷர் ட்ரையர் என்பது ஒரு அப்ளையன்ஸை விட அதிகம், இது ஒரு முதலீடாகும், இது நேரத்தையும் பணத்தையும் சேமிக்க உதவும், அதே நேரத்தில் வாழ்க்கையை எளிமையாகவும் வசதியாகவும் மாற்றுகிறது. எல்ஜி வாஷர்-ட்ரையரின் ஸ்பேஸ் சேவிங் வடிவமைப்பு ஆனது சிறிய லிவ்விங் ஏரியாக்களுக்கும் ஏற்றதாக உள்ளது, அதே நேரத்தில் ஒருங்கிணைந்த செயல்பாடு மெஷின்களுக்கு இடையில் ஆடைகளை மாற்றுவதற்கான தேவையை நீக்குவதன் மூலம் ஒப்பிடமுடியாத வசதியை வழங்குகிறது.

பயனுள்ள மற்றும் திறமையான, எல்ஜியின் புதிய துணி துவைக்கும் மற்றும் உலர்த்தும் முறை மற்றும் வாட்டர் பில்களை குறைக்க உதவுகிறது. கூடுதலாக, எல்ஜியின் மேம்பட்ட வாஷர்-ட்ரையர்கள் வழங்கும் பல்துறை மற்றும் மேம்பட்ட பீச்சர்கள் உங்களின் அனைத்து சலவை தேவைகளையும் கவனமாகவும் துல்லியமாகவும் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. எல்ஜியின் வாஷர் ட்ரையர் சராசரி மெஷினை தாண்டி வாழ்க்கையை இன்னும் வசதியாக்குகிறது!

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அப்ளை. படங்கள் பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் அம்சங்கள் மாடலில் இருந்து மாடலுக்கு மாறுபடலாம், மோட்டருக்கு 10 வருட உத்தரவாதம். மேலும் அறிய www.lg.com/in பக்கத்தை பார்வையிடவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Experience the New Way of Washing Drying with LG Washer Dryers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X