Home
Gadgets

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது
ஆன்லைனில் வெளியான கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனத்தின் சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.

8.4-இன்ச் டிஸ்பிளே

8.4-இன்ச் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனம் ஆனது 8.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 800x1340 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி டேப் மாடல் வெளிவரும்என்பது குறிப்பிடத்தக்கது.

டேப் ஏ7 லைட் மாடலில் ஒற்றை

மேலும் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா, பவர் பட்டன், பக்கவாட்டுகளில் வால்யூம் ராக்கர், கைரேகை சென்சார், செல்பீ கேமராக்கள் என பல்வேறு ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர்

மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர்

புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனத்தில் மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர் வசதி உள்ளது எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் இடம்பெறும் கேமரா சென்சார்கள் பற்றி தகவல் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ப்ளூடூத் 5,வைபை, 4ஜி எல்டிஇ

ப்ளூடூத் 5,வைபை, 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 கோவிட் தொற்றுநோயின் பரவ

அதேபோல்கோவிட் தொற்றுநோயின் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், கோவிட்-19க்கு எதிராகப் போராடும் முயற்சியில் இந்தியாவுக்கு உதவும் வகையில் சாம்சங் நிறுவனம் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்திய மதிப்பின்படி 5 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது ரூ. 37 கோடி ஆகும். வைரஸின் இரண்டாவது அலை காரணமாக முழு தேசமும் கடினமான நேரத்தில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நேரத்திற்கு மத்தியில் சாம்சங் பிராண்டின் இந்த பங்களிப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்று

இத்துடன் 3,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஒரு மில்லியன் எல்.டி.எஸ் சிரிஞ்ச்கள் உட்பட 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பங்குதாரர்களுடன் சரியான ஆலோசனைகள் மற்றும் உள்ளூர்நிர்வாகங்களின் உடனடி தேவைகளை மதிப்பிட்ட பிறகே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy Tab A7 Lite: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X