Home
Gadgets

மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி டிவி எக்ஸ்எல்.! என்னென்ன அம்சங்கள்?

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி வரும் மார்ச் 17-ம் தேதி ரெட்மி எடிவி எக்ஸ்எல் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி டிவி எக்ஸ்எல்.!

இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் அவர்கள் மார்ச் 17-ம் தேதி அறிமுகமாகும் ரெட்மி டிவியின் சில அம்சங்களை டீஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனு குமார் ஜெயின் வெளியிட்ட தகவலின்படி, டால்பி விஷன், விவிட் பிக்சர் எஞ்சின், HDR 10+ ஆதரவு போன்ற அம்சங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதாவது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி மேக்ஸ் டிவி மாடல் தான் இந்தியாவில் ரெட்மி டிவி எக்ஸ்எல் என்ற பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ரெட்மி மேக்ஸ் டிவியின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி டிவி எக்ஸ்எல்.!

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி மாடல் ஆனது எல்இடி-backlit எல்சிடி பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 3840 × 2160 பிக்சல் தீர்மானம் (4கே), 120Hz refresh rate, 178° viewing angle, எச்டிஆர், எச்டிஆர்10, எச்டிஆர்10+, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

இந்த ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் சிபியு (ARM Cortex-A73), ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி MIUI (TV 3.0) இல் இயங்குகிறது. இது Xiao Ai வாய்ஸ் அசிஸ்டெண்ட் மற்றும் பல்வேறு ஆதரவுகளை கொடுக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 12.5W அவுட்புட்-ஐ வழங்குகின்றன.

வைஃபை, புளூடூத் 5.0, 2 x யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள், ஏவி, மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி டிவி எக்ஸ்எல்.!

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி மாடல் ஆனது ஒரு MEMC வசதியைக் கொண்டுள்ளது. இது எஸ்டி முதல் எச்டி வரை இருக்கும் உள்ளடக்கத்தை மாற்ற அனுமதிக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.91,400-ஆக உள்ளது.

சியோமி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன. அதேபோல் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.ஆனால் விரைவில் வெளிவரும் ரெட்மி டிவி எக்ஸ்எல் மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த டிவியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒன்பிளஸ், நோக்கியா
நிறுவனங்களின் டிவி மாடல்களுக்கு போட்டியாக இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Redmi TV XL: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X