அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் மேக்புக் ஏர் மாடல்.!

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் மாடல் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது.

ஆப்பிள் மேக்புக் ஏர்

ஆப்பிள் மேக்புக் ஏர்

அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடலை அடுத்த ஆண்டு அப்டேட் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 13.3-இன்ச் மினி எல்.இ.டி டிஸ்பிளே கொண்ட மேக்புக் ஏர் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ளிவந்த தகவல்களிலும் புதிய

இதற்குமுன்பு வெளிவந்த தகவல்களிலும் புதிய மேக்புக் ஏர் மாடல் அடுத்து ஆண்டு அறிமுகமாகும் என்றே கூறப்பட்டுள்ளது. இதுதவிர 14-இன்ச, 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களையும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம்செய்யும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சாதனங்கள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Airtel அறிமுகம் செய்துள்ள 10 புதிய திட்டங்கள்.. 30ஜிபி முதல் 100ஜிபி வரை டேட்டா மற்றும் எக்ஸ்ட்ரா நன்மை..Airtel அறிமுகம் செய்துள்ள 10 புதிய திட்டங்கள்.. 30ஜிபி முதல் 100ஜிபி வரை டேட்டா மற்றும் எக்ஸ்ட்ரா நன்மை..

ல்இடி தொழில்நுட்பம்

அதேபோல் மினி எல்இடி தொழில்நுட்பம் வழக்கமான ஒஎல்இடி பேனல்களை போன்ற பலன்களை அளிக்கிறது. எனவே இது சிறந்த அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக மினி எல்இடி தொழில்நுட்பம் கொண்டு வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சாதனமாக 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

றிமுகம் செய்யப்படும் மேக்புக் ஏ

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் மேக்புக் ஏர் மாடல் ஆனது இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், மேக்சேப் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும். இதுதவிர தனித்துவமான சிப்செட் வசதியுடன் புதிய மேக்புக் ஏர் மாடல் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்

மேலும் வரும் ஜூலை 24-ம் தேதி துவங்கும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை ஜூலை 29-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PUBG இந்தியா கேமில் ப்ரோ பிளேயர் போல விளையாட இது தான் பெஸ்டான செட்டிங்ஸ்.. உடனே ட்ரை செய்யுங்க...PUBG இந்தியா கேமில் ப்ரோ பிளேயர் போல விளையாட இது தான் பெஸ்டான செட்டிங்ஸ்.. உடனே ட்ரை செய்யுங்க...

டலின் அசல் விலை

ஐபோன் எஸ்இ (2020) மாடலின் அசல் விலை ரூ.39,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.28,999-க்கு வாங்க முடியும். பின்பு ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் அசல் விலை ரூ.47,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.37,999-க்கு
வாங்க முடியும்.

அதேபோல் ஐபோன் 12 மாடலின் அசல் விலை ரூ.79,900-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.67,999-க்கு வாங்க முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Expected features of the upcoming MacBook Air : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X