டால்பி அட்மோஸ், டால்பி விஷன் ஆதரவுடன் 2022-இல் களமிறங்கும் சியோமி ஸ்மார்ட் டிவிகள்.!
இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது மற்ற நிறுவனங்களின் டிவிகளை விட தனித்துவமான அம்சங்களுடன் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, 2022-இல் அறிமுகமாகும் ஸ்மார்ட் டிவிகள் சில சுவாரஸ்யமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மேம்பட்ட டால்பி அட்மாஸ், டால்பி விஷன் போன்ற டால்பி தொழில்நுட்ப ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சீன பிராண்டுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும் அனைத்து சியோமி
ஸ்மார்ட் டிவிகளுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது இந்தியாவில் சியோமி, ரெட்மி ஸ்மார்ட் டிவிகள்அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் பல தரமான ஸ்மார்ட் டிவிகளைஅறிமுகம் செய்துள்ளன. அதேபோல் சியோமி நிறுவனம் இந்த ஆண்டு என்னென்ன புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவரும் என்பதை தெரிந்துகொள்ள Xiaomi மற்றும் Dolby இன் செய்தித் தொடர்பாளர்களுடன் நாங்கள் சமீபத்தில் உரையாடினோம்.
Xiaomi TVகளைப் பயன்படுத்தும் நுகர்வோரிடம் ஒரு குறிப்பிட்ட போக்கு உள்ளது, மக்கள் எந்த வகையான உள்ளடக்கத்தை விரும்புகிறார்கள், எந்த வகை மிகவும் பிரபலமானது, எந்தெந்த மொழிகளில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறார்கள்" என Xiaomi இல் உள்ள பார்ட்னர்ஷிப் மற்றும் கன்டென்ட் ஆபரேஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அனிஷா மேத்தா கூறுகிறார்.
சமீபத்தில் ஸ்மார்ட் டிவிகளில் டால்பி விஷன் போன்ற சில சமீபத்திய தொழில்நுட்பங்கள் உள்ளன, அவை பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. அதே நேரத்தில்,இதற்கு சமமாக ஸ்மார்ட் டிவிகளில் ஆடியோ அனுபவங்கள் முக்கியமானவை - இது நம்மை டால்பி அட்மாஸுக்குக் கொண்டுவருகிறது. டால்பி அட்மோஸ் என்பது டால்பி ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ தொழில்நுட்பமாகும். இது ஒரு மேம்பட்ட சினிமா அனுபவத்தை உருவாக்க திரையரங்குகளில் அடிக்கடி காணப்படும் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம்.
டால்பி அட்மோஸ் மற்றும் சரவுண்ட் ஒலி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இவை சிறந்த தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். அதேபோல் டால்பி அட்மோஸ் இசை மற்றும் பொழுதுபோக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது, ஏனெனில் இது மிகவும் ஆழமான ஒலி அனுபவத்திற்கான ஒரு புரட்சிகர இடஞ்சார்ந்த ஆடியோ தொழில்நுட்பமாகும்.குறிப்பாக ஒரு டிவியில் இரண்டு ஸ்பீக்கர்கள் மட்டுமே இருப்பதால், டால்பி அட்மாஸ் அனுபவத்தை ஸ்மார்ட் டிவியில் கொண்டு வருவது சவாலானதாக இருக்கும்.

ஆடியோ மற்றும் விஷுவல் தொழில்நுட்பம் என்று வரும்போது, டால்பி முதல் இடத்தைப் பிடிக்கிறது. டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம் அல்லது டிடிஎஸ், மைக்ரோசாஃப்ட் சவுண்ட் சிஸ்டம் போன்ற பல போட்டியாளர்கள் உள்ளனர். ஆனால் இவற்றை விட டால்பி அட்மாஸ் தான் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் நுகர்வோருக்கு முழுமையான ஆடியோ-விஷுவல் அனுபவத்தை வழங்குகிறது. அதேபோல் இந்த வருடம் அறிமுகம் செய்யப்படும் சியோமி ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் பல புதிய தொழில்நுட்பங வசதிகள் இடம்பெறும். அதேபோல் மேம்பட்ட டால்பி அட்மோஸ் மற்றும் சரவுண்ட் ஒலி சியோமி ஸ்மார்ட் டிவிகளில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவத்துள்ளார் அனிஷா மேத்தா.
அதேபோல் Xiaomi TV 5X இல் தொடங்கி, நாங்கள் Dolby Atmos ஐக் கொண்டு வரத் தொடங்கினோம், இது ஆடியோவில் உள்ள பிரீமியம் தொழில்நுட்பமாகும், இது மெய்நிகர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்துடன் உள்ளடக்கியது என்று Xiaomi இன் டிவி பிரிவின் தயாரிப்பு மேலாளர் சுதீப் சாஹு கூறியுள்ளார்.

சியோமி ஸ்மார்ட் டிவிகளில் பிரத்யேமாக வழங்கப்பட்ட இரண்டு ஸ்பீக்கள் தரமான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் Xiaomi க்கு கேம்-சேஞ்சராக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. Xiaomi TV 5X சில பிரீமியம் அம்சங்களுடன் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்கால வரிசைகளில் இந்த சேவைகளை விரிவுபடுத்துவதை Xiaomi நோக்கமாகக் கொண்டுள்ளது என்றுகூறியுள்ளார் சாஹு .

குறிப்பாக Dolby Atmos ஆனது ரெட்மி மற்றும் சியோமி டிவிகளில் எப்போதுமே இடம்பெறும் தொழில்நுட்பம் என்று கூறியுள்ளார் சாஹு. இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் சாதனங்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இந்நிறுவனம் தான் இந்திய சந்தையில் முன்னணியில் உள்ளது. ஸ்மார்ட்போன்கள் முதல் லேப்டாப் வரை பல சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட் டிவிகளுக்கு Dolby Atmos கொண்டு வருவது, இந்திய சந்தையில் எப்போதுமே முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இருக்க உதவும்.


Click it and Unblock the Notifications