'அடடே' சொல்ல வைக்கும் தொழில்நுட்ப கருவிகள்..!!

By Meganathan
|

தினந்தோரும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சந்தையில் பல்வேறு விதமான கருவிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கருவியும் மக்களின் பணிகளை சுலபமாக செய்து முடிக்க உதவும் வகையில் இருக்கும் நிலையில் தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்ற சில புதிய கருவிகள் குறித்து கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

நிக்சீ செல்பீ

நிக்சீ செல்பீ

செல்பீ மோகம் அதிகரித்து வரும் இந்த காலத்திற்கு ஏற்ற ஓர் கருவி தான் நிக்சீ, இதனை க்ரிஸ்டோஃப் கோஷ்ஸ்டல் வடிவமைத்திருக்கின்றார்.

அணியும் கருவி

அணியும் கருவி

கைகளில் அணிந்து கொள்ளும் இந்த கருவியை செல்பீ எடுக்கும் நேரத்தில் காற்றில் தூக்கி எறிந்தால் டிரோன் போன்று பறந்து செல்பீ எடுக்கும். தற்சமயம் தயாரிப்பில் இருக்கும் இந்த கருவி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ப்ரின்ட் ஸ்மார்ட்போன் கேஸ்

ப்ரின்ட் ஸ்மார்ட்போன் கேஸ்

ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்களை மிகவும் எளிதாக ப்ரின்ட் செய்ய ப்ரின்ட் ஸ்மார்ட்போன் கேஸ் வகைகளை ப்ரென்ச் நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வருகின்றது.

ப்ளூடூத்

ப்ளூடூத்

ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் மூலம் இணைந்து கொள்ளும் இந்த ப்ரின்டர் கேஸ் புகைப்படங்களை வெறும் 50 நொடிகளில் ப்ரின்ட் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கார்ப் லேசர் ரேஸர்

ஸ்கார்ப் லேசர் ரேஸர்

சாதாரண ரேஸர்கள் முகத்தினை பதம் பார்க்கின்றதா, லேசர் ரேஸர் கொண்டு ஸ்க்ராட்ச் இல்லாமல் ஷேவ் செய்ய முடியும் என்கின்றது ஸ்கார்ப்.

லேசர்

லேசர்

லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த ரேஸர் மென்மையான ஷேவ் செய்ய அனுமதிப்பதோடு 50,000 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. மேலும் இதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹோவர் போர்டு

ஹோவர் போர்டு

ஹோவர் போர்டு தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஒற்றை சக்கரம் கொண்ட ஹோவர் போர்டு எல்ஈடி விளக்கு, மற்றும் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கின்றது.

மோட்டார்

மோட்டார்

5000 வாட்ஸ் மோட்டார் கொண்டு இன்த ஹோவர் போர்டு அதிகபட்சம் மணிக்கு 16 மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாகும்.

ஸ்கல்லி ஏஆர்-1

ஸ்கல்லி ஏஆர்-1

தற்சமயம் உலகின் அதிநவீன தலைகவசமாக ஸ்கல்லி ஏஆர்-1 குறிப்பிட முடியும். தலைகவசமாக மட்டும் இருப்பதோடு ஜிபிஎஸ், மியூசிக் ப்ளேயர், மற்றும் கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Exciting Gadgets That You Should Know About. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X