Home
Gadgets

Epson அறிமுகம் செய்த புதிய 4கே ப்ரொஜெக்டர்.. 300 இன்ச்.. எச்டிஆர்10.. என்ன விலை?

எப்சன் (Epson) நிறுவனம் இந்தியாவில் எப்சன் இஎச்-எல்எஸ்9000பி 4கே ஹோம் தியேட்டர் ப்ரொஜெக்டர் (Epson EH-LS9000B 4K Home Theatre Projector) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. இப்போது எப்சன் இஎச்-எல்எஸ்9000பி 4கே ஹோம் தியேட்டர் ப்ரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

எப்சன் இஎச்-எல்எஸ்9000பி 4கே ஹோம் தியேட்டர் அம்சங்கள் (Epson EH LS9000B 4K Home Theatre Projector Specifications): 3எல்சிடி (3LCD) லேசர் புரொஜெக்ஷன் தொழில்நுட்பம் மற்றும் 4Kபிளேபேக் ஆதரவுடன் வருகிறது புதிய எப்சன் ப்ரொஜெக்டர் மாடல். அதுவும் 3840 x 2160 பிக்சல்ஸ், 4கே ரெசல்யூஷன் (4K Resolution), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

Epson அறிமுகம் செய்த புதிய 4கே ப்ரொஜெக்டர்.. 300 இன்ச்.. என்ன விலை?

எப்சன் இஎச்-எல்எஸ்9000பி 4கே ஹோம் தியேட்டர் மாடல் ஆனது 2,200 லுமன்ஸ் (2,200 Lumens) பிரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள், கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) ஆதரவு இதில் உள்ளது.

அதுவும் 2,500,000:1-க்கும் அதிகமான கான்ட்ராஸ்ட் ரேஷியோவுடன் (contrast ratio) வருகிறது எப்சன் இஎச்-எல்எஸ்9000பி 4கே ஹோம் தியேட்டர் மாடல். அதேபோல் திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் கேமிங் உள்ளடக்கங்களின் போது மென்மையான இயக்கத்திற்காக, எப்சன் நிறுவனம் இதில் ஃபிரேம் இன்டர்போலேஷன் (interpolation) ஆதரவையும் சேர்த்துள்ளது.

எப்சன் இஎச்-எல்எஸ்9000பி 4கே ஹோம் தியேட்டர் மாடல் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 150 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைடு லென்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புதிய எப்சன் இஎச்-எல்எஸ்9000பி 4கே ஹோம் தியேட்டர் ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இடத்திற்குத் தகுந்தபடி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் இந்த சாதனம். அதுவும் இந்த ப்ரொஜெக்டர் மாடலில் உள்ள Eco mode ஆனது 22dB வரையிலான குறைந்த இரைச்சல் மட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது.

Epson அறிமுகம் செய்த புதிய 4கே ப்ரொஜெக்டர்.. 300 இன்ச்.. என்ன விலை?

ஐபி கண்ட்ரோல் சப்போர்ட்( IP control support), ஸ்மார்ட் ஹோம் (smart home) மற்றும் ஏவி கண்ட்ரோல் (AV control systems) இந்த புதிய சாதனத்தில் உள்ளது. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், லேன், eARC/ARC சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எப்சன் இஎச்-எல்எஸ்9000பி 4கே ஹோம் தியேட்டர் மாடலில் உள்ளன.

எப்சன் இஎச்-எல்எஸ்9000பி 4கே ஹோம் தியேட்டர் மாடலின் விலை ரூ.3,69,999-ஆக உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த சாதனம் வாங்க கிடைக்கிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

photos credits: westcoasthifi, epson

Best Mobiles in India

English summary
Epson EH LS9000B 4K Home Theatre Projector launched in india check specification price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X