Home
Gadgets

Smart TV எதுக்கு? இந்த ஸ்மார்ட் Projector இருக்கே.. 200 இன்ச் டிஸ்பிளே.. ஸ்மார்ட் AI மற்றும் ஆன்ட்ராய்டு 11..

எப்சன் (Epson) நிறுவனம் அதன் ப்ரொஜெக்டர் வரிசையில் புதிதாக ஒரு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Smart Projector) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவைஸ் ஸ்மார்ட் டிவிக்கு (Smart TV) நிகரான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் அம்சங்களை ஏஐ (AI) உடன் பேக் செய்துள்ளது.

எப்சன் நிறுவனம் புதிதாக CH-TW5750 என்ற ப்ரொஜெக்டர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு ஸ்மார்ட் ப்ரொஜெக்டராக (smart projector) வெளிவந்துள்ளது. ஆம் மக்களே, நீங்கள் ஸ்மார்ட் டிவியில் (smart tv) செய்யும் அணைத்து விஷயங்களையும், இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டரில் செய்யலாம். குறிப்பாக இது ஆண்ட்ராய்டு 11 (Android 11) அடிப்படையிலான இயங்குதளத்தில் ஸ்மார்ட் டிவி போலவே இயங்குகிறது.

Smart TV எதுக்கு? இந்த ஸ்மார்ட் Projector இருக்கே.. 200 இன்ச் டிஸ்பிளே

எப்சன் CH-TW5750 ப்ரொஜெக்டர் (Epson CH-TW5750 Projector):

இது தவிர இதில் ஏஐ (AI) என்று அழைக்கப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வாய்ஸ் ஃபங்க்ஷன் (AI voice functions), டென்சென்ட் அரோரா டிவி ஓஎஸ் (Tencent Aurora TV OS) போன்ற அம்சங்களும் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய எப்சன் CH-TW5750 ப்ரொஜெக்டர் (Epson CH-TW5750 Projector) பற்றிய சிறப்பம்சம் (Specs), விலை (Price) மற்றும் மற்ற தகவல்களை இப்போது பார்க்கலாம்.

இந்த எப்சன் CH-TW5750 ப்ரொஜெக்டர் சாதனம் 3LCD டிஸ்பிளே டெக்னாலஜி (3LCD display technology) மற்றும் எப்சன் நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய பிரத்தியேகமான கிரிஸ்டல் கிளியர் ஃபைன் டெக்னாலஜி (Crystal Clear Fine Technology - C2FINE) போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த C2FINE தொழில்நுட்பம் மிகவும் துல்லியமான விசுவல் குவாலிட்டியை அசல் கலர் மற்றும் ஹை-பிரைட்னஸ் (high brightness) உடன் வழங்குவதற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தையில் கிடைக்கும் மற்ற பெஸ்ட் ப்ரொஜெக்டர் சாதனங்களை காட்டிலும், இதில் பல தரமான அம்சங்களை எப்சன் நிறுவனம் பேக் செய்துள்ளது. குறிப்பாக, இந்த புதிய எப்சன் CH-TW5750 ப்ரொஜெக்டர் சாதனத்தில், 10 பிட் கலர் டெப்த், 6 சேனல் கலர் அடஜஸ்ட்மென்ட், பயனர் விருப்பத்திற்கேற்ப கலர் டெம்ப்ரேச்சர் மாற்றம், சாச்சுரேஷன் அடஜஸ்ட்மென்ட் மற்றும் DUV வால்யூ மாற்றம் போன்ற பல அடஜஸ்ட்மென்ட்களை இந்த சாதனம் வழங்குகிறது.

Smart TV எதுக்கு? இந்த ஸ்மார்ட் Projector இருக்கே.. 200 இன்ச் டிஸ்பிளே

ஃபுல் ஸ்மார்ட் ஏஐ (AI) மற்றும் ஆண்ட்ராய்டு 11 (Android 11) அம்சம்:

இந்த ப்ரொஜெக்டர் சாதனம் 3 பீஸ் 0.61 இன்ச் பாலிசிலிக்கான் ஆக்ட்டிவ் மேட்ரிக்ஸ் சிப் (0.61-inch polysilicon active matrix chip) உடன் வருகிறது. இது நெட்டிவ் 1080P ரோசொலுஷன் உடன் 2700 பிரைட்னஸ் லுமென்ஸ் (lumens) ISO தரத்தை வழங்குகிறது. இதன் காரணமாக எல்லா இடங்களிலும் இந்த ப்ரொஜெக்டர் சிறப்பாக செயல்படுகிறது. இது 1.2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 35,000:1 ஹை-டைனமிக் ரேட்ஸியோ அம்சத்தை கொண்டுள்ளது.

இது மிகவும் துல்லியமான கலர் அம்சத்தை வழங்குகிறது. இது 64GB ஸ்டோரேஜ் உடன் ஏஐ வாய்ஸ் ஃபங்க்ஷன் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் சாதனமாக வெளிவந்துள்ளது. இது 7500 மணி நேரம் சிறப்பாக செயல்படும் ECO மோட் உடன் வருகிறது. அதாவது, 6 ஆண்டுகள் 7 மாதம் வரை லைட் சோர்ஸ் அனுபவத்தை வழங்கக்கூடியது. இது 3 வருட உத்தரவாதத்துடன், 3 வருட லைட் சோர்ஸ் வாரன்டியையும் வழங்குகிறது.

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய எப்சன் CH-TW5750 ப்ரொஜெக்டர் (Epson CH-TW5750 Projector) சாதனம் $594 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 49,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ப்ரொஜெக்டர் JD.com வழியாக முன்பதிவு செய்ய கிடைக்கிறது. 200" இன்ச் டிஸ்பிளே வரை உங்களால் இதில் ப்ராஜெக்ட் செய்து மகிழ முடியும். HDMI மூலம் கேபிள் டிவி சேனல்களையும் பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Epson CH-TW5750 Projector with Android 11 OS and AI Voice Function Launched Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X