Home
Gadgets

32-இன்ச் முதல் 65-இன்ச் வரை.. இந்தியாவில் 4கே டிவிகளை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.. என்ன விலை?

இந்தியாவில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு எனப் பிரபல பிராண்டாக எலிஸ்டா வளர்ந்து வருகிறது. குறிப்பாக எலிஸ்டா நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட் டிவிகளை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது எலிஸ்டா நிறுவனம்.

அதாவது எலிஸ்டா நிறுவனம் Xplore ஸ்மார்ட் எல்இடி டிவி சீரிஸ் (Xplore Smart LED TV series) மாடல்களை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஆகிய அளவுகளில் இந்த டிவிகள் கிடைக்கிறது. தரமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் 4கே டிவிகளை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.. என்ன விலை?

குறிப்பாக கூகுள் டிவி இயங்குதளம் மூலம் இயங்குகிறது இந்த எலிஸ்டா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிகள். எனவே உங்களது போன் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களை இந்த டிவிகளுடன் எளிமையாக இணைத்துப் பயன்படுத்த முடியும். மேலும் கிட்ஸ் மோட் வசதியுடன் இந்த அசத்தலான Xplore ஸ்மார்ட் எல்இடி டிவி சீரிஸ் மாடல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 32-இன்ச் டிவி ஆனது எச்டி (HD) ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி (FHD) ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மற்றவை அதாவது இன்னும் ஒரு 43-இன்ச் டிவி, 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 4கே (4K) அல்ட்ரா எச்டி ஆதரவுடன் வெளிவந்துள்ளன.

எலிஸ்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவிகளில் ஸ்கிரீன் மிரரிங், குரோம்காஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இதில் சில ஸ்மார்ட் டிவிகள் டால்பி ஆடியோ ஆதரவுடன் கூடி சவுண்ட் பார் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவிகளில் எச்டிஆர் 10 ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். மேலும் இந்த புதிய டிவிகள் Wall mount வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் Xplore ஸ்மார்ட் எல்இடி டிவி சீரிஸ் மாடல்களின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எலிஸ்டா நிறுவனம்.

வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளன எலிஸ்டா Xplore ஸ்மார்ட் எல்இடி டிவி சீரிஸ் மாடல்கள். குறிப்பாக இந்த ரிமோட்டில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூட்யூப் போன்றவற்றின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன. மேலும் இந்த டிவிகளில் பல்வேறு ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் 4கே டிவிகளை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.. என்ன விலை?

அதேசமயம் கேமிங் வசதிக்கு தகுந்த அனைத்து அம்சங்களுடன் இந்த Xplore ஸ்மார்ட் எல்இடி டிவி சீரிஸ் மாடல்கள் வெளிவந்துள்ளன. புளூடூத் 5.1, டூயல் பேண்ட் வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆர்எப், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

எலிஸ்டா அறிமுகம் செய்த 32-இன்ச் எச்டி டிவியை ரூ.16,999 விலையிலும், 43-இன்ச் ஃபுல் எச்டி டிவியை ரூ.27,500 விலையிலும் வாங்க முடியும். மேலும் 43-இன்ச் 4கே டிவி ரூ.31,500 விலையிலும், 50-இன்ச் 4கே டிவி ரூ.39,990 விலையிலும், 55-இன்ச் 4கே டிவி ரூ.42,990 விலையிலும், 65-இன்ச் 4கே டிவி ரூ.62,990 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவிகள் முன்னணி எலக்ட்ரானிக் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Elista Xplore series Google TV launched in India: check specifications, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X