வீட்டுக்குள்ள ஒரு சினிமா தியேர்ட்டர்.. 85-இன்ச் ஸ்க்ரீன், Dolby ஆடியோ.. இறங்கி அடிச்ச Elista.. என்ன விலை?
இவ்வளவு கம்மியான விலைக்கு 85-இன்ச் ஸ்மார்ட் டிவி-ஆ என்று வாய்பிளக்க வைக்கும்படியாக எலிஸ்டா (Elista) நிறுவனம் தனது புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவியை (85-inch Smart TV) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெஸல்லெஸ் டிஸைன் (Bezel-less design), எச்டிஆர் 10 (HDR 10) ஆதரவு உடனான 4கே பேனல், கூகுள் டிவி (Google TV) போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை நிர்ணயம் என்ன? இது வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? எந்தெந்த தளங்களில் வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
எலிஸ்டா 85-இன்ச் கூகுள் டிவி ஸ்மார்ட் டிவியின் மற்ற அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி, எலிஸ்டாவின் 85-இன்ச் கூகுள் டிவி ஆனது 4கே ரெசல்யூஷன் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவு உடனான பெஸல்லெஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கூடவே இது டால்பி ஆடியோ ஆதரவுடன் (Dolby Audio support) கூடிய ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

மேலும் இது பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் (Chromecast) அம்சத்தைக் கொண்டுள்ளது, இதன் கீழ் பயனர்கள் தங்கள் போன், டேப்லெட் அல்லது லேப்டாப்பில் உள்ள கண்டென்ட்டை (திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், புகைப்படங்கள் மற்றும் பலவற்றை) ஸ்மார்ட் டிவி வழியாக ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும். மேலும் எலிஸ்டா 85-இன்ச் கூகுள் டிவியானது அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) உள்ளிட்ட முக்கிய ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுடன் இணக்கமானது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட் டிவி 5GHz/2.4GHz டூயல்-பேண்ட் வைஃபை-ஐ (Dual-band WiFI) வழங்குகிறது. மேலும் இது ப்ளூடூத் (Bluetooth) இணைப்பு, ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) அம்சம், எச்எம்டிஐ (HDMI) மற்றும் யூஎஸ்பி போர்ட்களையும் (USB Ports) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ள ஹே கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் (Hey Google Voice Assistant) மூலம் வாய்ஸ் கண்ட்ரோல்களையும் (Voice Controls) மேற்கொள்ளலாம்.
எலிஸ்டா நிறுவனத்தின் இந்த புதிய 85-இன்ச் வேரியண்ட் ஆனது இந்நிறுவனத்தின் கீழ் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூகுள் டிவி சீரீஸில் (Google TV Series) இணைகிறது. அறியாதோர்களுக்கு இந்த சீரீஸின் கீழ் 32-இன்ச் முதல் 65-இன்ச் வரையிலான விருப்பங்கள் உள்ளன. இது நெட்பிளிக்ஸ் (Netflix), ப்ரைம் வீடியோ (Prime Video), யூஎஸ்பி ஆப்ஷன் (USB Option) மற்றும் யூடியூப் (YouTube) ஆகியவற்றிற்கான பிரத்யேக ஹாட்ஸ்கீகளை (Dedicated hotkeys) கொண்ட ரிமோட் உடன் வருகிறது.
எலிஸ்டா 85-இன்ச் கூகுள் டிவி ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில், எலிஸ்டா 85 இன்ச் கூகுள் டிவியின் விலை ரூ.1,60,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்கள் ஆன அமேசான் இந்தியா (Amazon India), பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது.
கூடுதலாக இது நாடு முழுவதும் உள்ள முக்கிய நுகர்வோர் எலக்ட்ரானிக் கடைகள் (Consumer electronics stores) மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, எலிஸ்டா 85-இன்ச் கூகுள் டிவி ஸ்மார்ட் டிவியை வாங்குபவர்களுக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance) உள்ளிட்ட பார்ட்னர்களிடமிருந்து கட்டண சலுகைகள் கிடைப்பதை எலிஸ்டா நிறுவனம் உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications








