Home
Gadgets

ஆர்டர் பறக்குது.. Coolita OS.. 4GB ஸ்டோரேஜ்.. பட்ஜெட் விலையில் Elista டிவிகள் அறிமுகம்..எந்த மாடல்?

இந்தியாவில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு என பிரபல பிராண்டாக எலிஸ்டா வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் இரண்டு புதிய டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது எலிஸ்டா.

அதாவது எலிஸ்டா 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி (SF43EBA88) டிவி மற்றும் 32 இன்ச் எல்இடி (SH32EBA86) டிவி மாடல்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக Coolita OS மூலம் இயங்குகிறது இந்த டிவி. எனவே அனைத்து ஓடிடி தளங்களையும் இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

ஆர்டர் பறக்குது.. Elista டிவிகள் அறிமுகம்..எந்த மாடல்?

எலிஸ்டா 43-இன்ச் மற்றும் 32-இன்ச் டிவிகளின் அம்சங்கள் (Elista Smart TVs Specifications): 43-இன்ச் ஃபுல் எச்டி டிவி எலிஸ்டா டிவி 1920 x 1080 பிக்சல்ஸ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இதன் 32 இன்ச் எச்டி டிவி 1366 X 768 பிக்சல்ஸ் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு டிவிகளும் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக இந்த இரண்டு டிவிகளும் ஏ பிளஸ் பேனல் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன. அதேபோல் அதிகமான பிரைட்னஸ் மற்றும்
வண்ணங்களை வழங்கும் இந்த எலிஸ்டா ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எலிஸ்டா நிறுவனம்.

எலிஸ்டா 43 இன்ச் மற்றும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது Coolita OS மூலம் இயங்குகிறது. பின்பு பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5, யூடியூப், ப்ளெக்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் போன்ற ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். இதுதவிர பிளே ஸ்டோரில் இருந்து ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

குவாட்-கோர் பிராசஸர் (Quad-core Processor) வசதியுடன் இந்த அசத்தலான எலிஸ்டா 43 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு எலிஸ்டா ஸ்மார்ட் டிவிகளும் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. எனவே இவற்றில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் ஆப் ஸ்டோர் (app store), ஸ்கிரீன் மிரரிங் ( screen mirroring), வெப் பிரவுசர் (Web browser) உள்ளிட்ட பல சிறப்பான வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவிகள். இதுதவிர பல்வேறு அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன.

ஆர்டர் பறக்குது.. Elista டிவிகள் அறிமுகம்..எந்த மாடல்?

குறிப்பாக வைஃபை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன், ஏவி, ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய எலிஸ்டா 43-இன்ச் மற்றும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள். மேலும் இந்த இரண்டு டிவிகளுக்கும் 1 வருடம் வாரண்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எலிஸ்டா 43 இன்ச் ஃபுல் எச்டி (LED-SF43EBA88) டிவியின் விலை ரூ.35,999-ஆக உள்ளது. பின்பு எலிஸ்டா 32-இன்ச் எச்டி ( LED-SH32EBA86) டிவியின் விலை ரூ.17,990-ஆக உள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த டிவியை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
elista 32 hd 43 fhd tv with Coolita OS launched in India:check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X