Home
Gadgets

வாரி வாரி விற்கும் பிளிப்கார்ட்.. 300 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் Egate 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

300 இன்ச் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் ஈகேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ (Egate Duster 5X PRO) விற்பனையிலும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இப்போது, ஆஃபரில் கிடைப்பதால், விற்பனை மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த ஈகேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலின் விவரங்களை பார்ப்போம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 36 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.15,991 விலைக்கு இந்த ஈகேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி மற்றும் ஈஎம்ஐ சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த ஈகேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலை வாங்கலாம்.

வாரி வாரி விற்கும் பிளிப்கார்ட்.. 300 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபர்!

ஈகேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ அம்சங்கள் (Egate Duster 5X PRO Specifications): இது நேட்டிவ் 1080p (1920 x 1080) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. 4கே எச்டிஆர் (4K HDR) மற்றும் எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கொடுக்கிறது. 500 ஐஎஸ்ஓ லுமன்ஸ் பிரைட்னஸ் மற்றும் 6000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ (Contrast Ratio) கொடுத்துள்ளது. 300 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம்.

நொடிக்கு 60 ஃபிரேம்கள் (60 FPS) வேகத்தில் வீடியோக்களை பார்க்கலாம். வேல் ஓஎஸ் (Whale OS) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொடுத்துள்ளது. ஆகவே, நெட்ஃபிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5), சோனி லிவ் (SonyLIV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த ஈகேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ கொடுக்கிறது.

டஸ்ட் ஃப்ரீ சப்போர்ட் கொடுத்துள்ளது. ஆகவே, இந்த ப்ரொஜெக்டரில் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி ஷீல்டு ஆப்டிகல் இன்ஜின் (Sealed Optical Engine) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus) மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளன. ஃபிளெக்ஸ் ஆங்கிள் (FlexAngle) டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, எந்தவொரு சுவற்றிலும், எந்த கோணத்திலும் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். சாட் ஜிபிடி வாய்ஸ் சர்ச் சப்போர்ட் கிடைக்கிறது. இதற்காக ப்ளூடூத் ரிமோட்டில் மைக்ரோஃபோன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, வாய்ஸ் சர்ச் (Voice Search) வழியாகவும் ப்ரொஜெக்டரை கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். லந்தனைடு கிளாஸ் (Lanthanide Glass) டெக்னாலஜி கிடைக்கிறது.

இந்த டெக்னாலஜி இருப்பதால், பிரத்யேக ஸ்கிரீன் இல்லாமலேயே, சுவர் உள்ளிட்டவற்றில் கிளியரான புரொஜெக்சன் கிடைக்கும். ஆம்லாஜிக் 950டி4 (Amlogic950D4) குவாட் கோர் ப்ராசஸர் மற்றும் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த ஈகேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் கொடுத்துள்ளது.

10W HiFi ஸ்பீக்கர்கள் இதில் கொடுக்கப்பட்டு உள்ளன. டூயல் பேண்ட் வைஃபை 6 (Dual Band WiFi 6), டூ-வே ப்ளூடூத் 5.0 (Two Way Bluetooth 5.0) கிடைக்கிறது. மேலும், எச்டிஎம்ஐ 2.1 (HDMI 2.1), யுஎஸ்பி (USB) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. லேப்டாப், ஸ்மார்ட்போன், கேமிங் கன்சோல் போன்றவற்றை எளிதாக இணைத்து பயன்படுத்தலாம்.

ஈகேட் (EGate) நிறுவனம் இந்த ஈகேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலுக்கு 1 வருட வாரண்டியை வழங்குகிறது. வாரண்டியை பெற தயாரிப்பை நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். வாரண்டி காலத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், வீட்டிற்கே வந்து பொருட்களை பெற்று சென்று சரிசெய்து தரும் (Free Home pickup & drop) இலவச சேவை வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Egate Duster 5X PRO Automatic Projector Available At 36 Percent Discount on Flipkart Check Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X