இ-சிம் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப்பிள் வாட்ச்! விரிவான அலசல்.!

இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் வாட்ச் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை என்னவென்றால், இந்த சேவைக்கு தனியே கட்டணம் இல்லை.

|

இந்தியாவில் முதல்முறையாக செல்லுலார்/LTE வெர்சன் ஆப்பிள் வாட்ச் தொடர் 3-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள். இந்த செல்லுலார் ஆப்பிள் வாட்ச்சுடன் இந்தியாவில் சேவை வழங்கவுள்ளன ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள். இதற்கு முன்பாகவே, இந்த ஆப்பிள் வாட்ச்க்கு சேவை வழங்கும் அளவிற்கு யுனிபைட் லைசென்ஸ் கூறியபடி உட்கட்டமைப்பு வசதிகள் ஏர்டெல்லிடம் இல்லை என DoT யிடம் புகார் அளித்துள்ளது ஜியோ.

ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் தாமதம் ஆகிறதா?ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் தாமதம் ஆகிறதா?

இ-சிம் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப்பிள் வாட்ச்! விரிவான அலசல்.!

இ-சிம் தொழில்நுட்பம் என்றால் என்ன?
ஆப்பிள் நிறுவனத்தால் உலகம் முழுக்க அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய தொழில்நுட்பம், இந்தியாவில் அதன் முந்தைய ஆப்பிள் வாட்ச் வெர்சன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும்,இனி போனில் இருந்து சுதந்திரமாக தனித்து செயல்படக் கூடியதாகவும் இருக்கும். ஆப்பிள் வாட்ச் உங்கள் போன் எண்ணின் நீட்சியாக நெட்வொர்க் உடன் இணைய முடியும். ஒருமுறை நெட்வொர்க் உடன் இணைத்துவிட்டாலே, இந்த வாட்ச் தனித்து அழைப்புகளை மேற்கொள்ளவும், பாடல்களை இசைக்க, ஓலா மற்றும் உபரை அழைக்க இணையத்தை பயன்படுத்தவும் ஆரம்பித்துவிடும். ஆனால் இவற்றையெல்லாம் செய்ய ஐபோனுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை.

ஆப்பிள் வாட்ச்சில் பயன்படுத்தும் இந்த புதிய தொழில்நுட்பம், இ-சிம்மை அடிப்படையாக கொண்டது. ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனில் பயன்படுத்தும் சாதாரண சிம் போல இல்லாமல், இந்த இ-சிம்மை பயனர்கள் மாற்றவே , பறிமாற்றிக்கொள்ளவோ முடியாது. வாட்ச்சிலேயே உள்ள ஆண்ட்டனா மூலம் யுனிவர்செல் மொபைல் டெலிகம்யூனிகேசன் சிஸ்டம் ரேடியோவை பயன்படுத்தி நெட்வொர்க்கில் இணைய முடியும். இன்டர்நேசனல் மொபைல் சப்ஸ்கிரைபர் ஐடென்டிடி (IMSI) எண்ணை சேமித்து கொள்வதன் மூலம் அழைப்புகளை இணைக்கவும், ஐபோன் பயனர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தால் வாட்ச்சுக்கு அழைப்பை திருப்பவும் முடியும்.

இ-சிம் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப்பிள் வாட்ச்! விரிவான அலசல்.!

இந்த சேவைக்கு இந்தியாவில் கூடுதல் கட்டணம் இல்லை
இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் வாட்ச் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை என்னவென்றால், இந்த சேவைக்கு தனியே கட்டணம் இல்லை. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை போல தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆப்பிள் வாட்ச் சேவைக்கு தனி கட்டணம் வசூலிக்காமல், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள திட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இந்த சேவையை வழங்குகின்றன. ஆப்பிள் வாட்ச்கள் புவியியல் அமைப்பை பொறுத்தது என்பதால், அமெரிக்காவில் வாங்கும் வாட்சுகள் இந்தியாவில் இயங்காது என்பதை நினைவிற் கொள்ளவும்.

இந்த இ-சிம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் தனது கியர் S2 3G யில் பயன்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஐபாட் பாரோ மாடல்களில் சாதாரண சிம்மிற்கு பதில் ஆப்பிள் சிம் மூலம் லோக்கல் நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டது.

இ-சிம் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப்பிள் வாட்ச்! விரிவான அலசல்.!

ஒழுங்குமுறை பிரச்சனைகள் இல்லை
முன்னதாக சிம் கார்டு என்பது பயனர்களின் தனித்துவ அடையாளமாக இல்லாதது சட்டவிரோதம் என்ற இந்திய தொலைதொடர்பு ஒழுங்குவிதிகளின் காரணமாக, இந்த இ-சிம் தொழில்நுட்பத்தில் பணியாற்றிவந்த நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைய தயங்கின. ஆனால் இந்த ஆப்பிள் தொழில்நுட்பத்தில்,வாட்ச் மற்றும் போனின் இ-சிம் இன்டர்நேசனல் மொபைல் சப்ஸ்கிரைபர் ஐடென்டிடி (IMSI) எண் அடையாளத்தை பெற்றிருப்பதால் ஒழுங்குமுறை ஆணையத்தை பற்றிய கவலையில்லை.
Best Mobiles in India

English summary
e-SIM Technology in Apple Watch Explained ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X