மளமளவென குறைந்த 4K ப்ரொஜெக்டர் விலை.. கூகுள் டிவி ஓஎஸ்.. ஆட்டோ போகஸ்.. 300 இன்ச்.. எந்த மாடல்?
இந்தியாவில் 4கே அல்ட்ரா எச்டி சப்போர்ட் மற்றும் 300 இன்ச் ஸ்கிரீன் அளவு கொண்ட இ கேட் ஜென் 9எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் (E GATE Zen 9X Google TV Projector) மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது இ கேட் ஜென் 9எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் முன்பு ரூ.24.990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலின் விலை குறைக்கப்பட்டு ரூ.20,990 விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது இந்த 4கே ப்ரொஜெக்டர் அமேசான் தளத்தில் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இ கேட் ஜென் 9எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் அம்சங்கள் (E GATE Zen 9X Google TV Projector Specifications): இந்த இ கேட் ஜென் 9எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது. மேலும் இதில் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளது. எனவே இந்த சாதனம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதுவும் 900 ஐஎஸ்ஒ லுமன்ஸ் (900 ISO Lumens) பிரைட்னஸ் வசதியுடன் இ கேட் ஜென் 9எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. அதேபோல் 60000 மணி நேர லேம்ப் லைஃப் (60000 Hours Lamp Life) வழங்குகிறது இந்த ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் 8000:1 டைனமிக் கான்ட்ராஸ்ட் ரேஷியோ ஆதரவும் இந்த ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. அதேபோல் இ கேட் ஜென் 9எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச், 150 இன்ச் டிவிகளை வாங்க அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.
தரமான குவாட் கோர் பிராஸசர் உடன் இ கேட் ஜென் 9எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 14W ஸ்பீக்கர்களும் இதில் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இ கேட் ஜென் 9எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்தது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.

ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ 6D கீஸ்டோன் (Auto 6D Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), உள்ளிட்ட பல வசதிகள் இ கேட் ஜென் 9எக்ஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
மேலும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.2, டூயல் பேண்ட் வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications
