Home
Gadgets

கூவி, கூவி விற்கும் அமேசான்.. 300 இன்ச்.. எச்டிஆர் 10.. ஆட்டோ போகஸ்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது 4கே சப்போர்ட் கொண்ட இ கேட் டஸ்டர் 5எக்ஸ் (E Gate Duster 5X) ப்ரொஜெக்டர் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த சாதனத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

இப்போது அமேசான் தளத்தில் இ கேட் டஸ்டர் 5எக்ஸ் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.2500 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

கூவி, கூவி விற்கும் அமேசான்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

இ கேட் டஸ்டர் 5எக்ஸ் அம்சங்கள் (E Gate Duster 5X Specifications): இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. மேலும் இதில் எச்டிஆர் பிளஸ் (HDR +) மற்றும் எச்எல்ஜி (HLG) ஆதரவுகளும் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் 500 ஐஎஸ்ஒ லுமன்ஸ் ( 500 ISO Lumens ) பிரைட்னஸ் வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு மிகவும் அருமையாக உள்ளது.

தரமான ஆம்லாஜிக் 950S மற்றும் குவாட் கோர் பிராஸசர் உடன் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

குறிப்பாக இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 150 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.

அதுவும் ஆட்டோ 4D+4P கீஸ்டோன் (Auto 4D + 4P Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus), ஜூம் செட்டிங்க்ஸ் (zoom settings) உள்ளிட்ட பல வசதிகள் இ கேட் டஸ்டர் 5எக்ஸ் மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் 60000 மணி நேர லேம்ப் லைஃப் (60000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது.

கூவி, கூவி விற்கும் அமேசான்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

தனித்துவமான ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கொண்ட 10W பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இ கேட் டஸ்டர் 5எக்ஸ் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும்.

மேலும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

Best Mobiles in India

English summary
E Gate Duster 5X Projector with Android 13 available at discounted price on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X