இனி 100 இன்ச் டிவி கதை முடிந்தது.. ஆட்டோ கீஸ்டோன்.. 300 இன்ச்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
தற்போது அமேசான் தளத்தில் Amazon World Cup Sale எனும் பெயரில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விறப்பு விற்பனையில் இ கேட் 4கே ப்ரொஜெக்டர் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் தளத்தில் தற்போது இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ (E Gate Duster 5X Pro) மாடலுக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ அம்சங்கள் (E Gate Duster 5X Pro Specifications): 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த அசத்தலான இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல். மேலும் இதில் எச்டிஆர் பிளஸ் (HDR +) மற்றும் எச்எல்ஜி (HLG) ஆதரவுகளும் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலில் 500 ஐஎஸ்ஒ லுமன்ஸ் ( 500 ISO Lumens ) பிரைட்னஸ் வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு மிகவும் அருமையாக உள்ளது.
ஆம்லாஜிக் 950D4 மற்றும் குவாட் கோர் பிராஸசர் உடன் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
குறிப்பாக இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 150 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.
ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) உள்ளிட்ட பல வசதிகள் இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். 10W பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை தரும்.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் தற்போது கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








