யாருமே எதிர்பார்க்கல.. ரூ.7,501 பட்ஜெட்ல 200 இன்ச்.. ஆண்ட்ராய்டு OS.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட்டில் இ கேட் Atom 4எக்ஸ் ஏர் (E Gate Atom 4X Air) ப்ரொஜெக்டர் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட்டில் இ கேட் Atom 4எக்ஸ் ஏர் மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7501 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

இ கேட் Atom 4எக்ஸ் ஏர் ப்ரொஜெக்டர் அம்சங்கள்(E Gate Atom 4X Air Projector Specifications): 720P நேட்டிவ் ரெசல்யூஷன், 1080 பிக்சல்ஸ் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது இ கேட் Atom 4எக்ஸ் ஏர் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் இதில் எச்டிஆர் பிளஸ் (HDR +) மற்றும் எச்எல்ஜி (HLG) ஆதரவுகளும் உள்ளன. எனவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான படங்களைப் பார்க்க முடியும்.
குறிப்பாக இ கேட் Atom 4எக்ஸ் ஏர் ப்ரொஜெக்டர் மாடலில் 400 ஐஎஸ்ஒ லுமன்ஸ் (400 ISO Lumens) பிரைட்னஸ் வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு மிகவும் அருமையாக உள்ளது.
குவாட் கோர் பிராஸசர் உடன் இ கேட் Atom 4எக்ஸ் ஏர் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த சாதனத்தில் பல கேமிங் அம்சங்களும் உள்ளன.
அதேபோல் இ கேட் Atom 4எக்ஸ் ஏர் ப்ரொஜெக்டர் மூலம் 210 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். ஆகவே 100 இன்ச ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.
அதுவும் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) உள்ளிட்ட பல வசதிகள் இ கேட் Atom 4எக்ஸ் ஏர் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

இ கேட் Atom 4எக்ஸ் ஏர் ப்ரொஜெக்டர் மாடல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். 5W பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.
யுஎஸ்பி (USB) போர்ட், எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.4, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ப்ரொஜெக்டர் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
photo credits: egate-world


Click it and Unblock the Notifications