Home
Gadgets

டைசன் ப்யூர் கூல் லிங் ஏர் ப்யூரிஃபயர்: ஒரு கண்ணோட்டம்

டைசன் ப்யூரிஃபயரின் அடிப்பகுதியில் தான் அனைத்து விதமான பணிகளும் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

By Sugumar A D

இந்தியாவில் தற்போது ஏர் ப்யூரிஃபையர் வீட்டு உபயோக பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. வீட்டினுள் உள்ள காற்று தரமாக இருந்தால் தான் ஆரோக்கியம் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவியிருப்பது தான் இதற்கு காரணம். இதனால் சில ஆண்டுகளாக ஏர் ப்யூரிஃபயர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் புதிய புதிய நிறுவனங்கள் ஏர் ப்யூரிஃபயர்களை அறிமுகம் செய்து வருவதால் இதன் விலை வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விற்பனை அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

டைசன் ப்யூர் கூல் லிங் ஏர் ப்யூரிஃபயர்: ஒரு கண்ணோட்டம்.!

இந்த வகையில் முக்கிய பிராண்டான பிரிட்டன் தொழில்நுட்பத்துடன் கூடிய டைசன் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்துள்ளது. ஏர் ப்யூரிஃபயர்ஸ், வேக்கம் கிளீனர், ஹேர் டிரையர்ஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பொருட்களில் உள்ள மோட்டார் திறன் மற்றும் புதுமையான வடிவமைப்பு போன்றவை சிறப்பம்சமாக கூறப்படுகிறது. இந்திய சந்தைகளில் கிடைக்கும் இதர ப்யூரிஃபயர்களை விட டைசன் ப்யூரிஃபயர் வித்தியாமாக மாறுபட்டுள்ளது. மக்களை கவருவதற்காக வித்தியாசமான வடிவமைப்புடன் முயற்சியை தொடங்கியுள்ளது. மேலும் இதில் மற்ற நிறுவனங்கள் தவறவிட்ட பல பயனுள்ள சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இதர ப்யூரிஃபயர்களை விட டைசன் ப்யூரிஃபயர் அடக்கமான உருவம் மற்றும் கவர்ச்சியாகவும் உள்ளது. டெஸ்க் மற்றும் டவர் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. ப்யூரிஃபயர்களின் வெளிதோற்றம் தான் பெரும்பாலும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்டது. இதை பார் க்கும் போது வயர்லெஸ் டவர் ஸ்பிக்கர் போல காட்சியளிக்கிறது. அருகில் சென்று பார்க்கும் போது தான் காற்றை சுத்திகரிக்க சிந்தனைமிக்க வடிவமைப்பு அங்கே இருப்பதை பார்க்க முடியும்.

ஃபேன் போல் பயன்படும்

ஃபேன் போல் பயன்படும்

டைசன் ப்யூரிஃபயரின் அடிப்பகுதியில் தான் அனைத்து விதமான பணிகளும் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சக்திவாய்ந்த மோட்டார் காற்றை உள்ளே இழுத்து சுத்திகரித்து வெளியேற்றுகிறது. காற்றில் உள்ள துகள் பொருட்கள் மற்றும் கார்பனை வடிகட்டிவிடுகிறது. 0.1 மைக்ரான்ஸ் அளவு கொண்ட பொருட்கள் டைசன் ப்யூரிஃபயரின் ஃபில்ட்டரில் தங்கிக் கொள்ளும். அதனால் சுத்தமான காற்றை மட்டுமே வெளியேற்றும்.

காற்றில் உள்ள மாசு பொருட்கள் அகற்றப்பட்டவுடன் சுத்தமான காற்றை அறைக்குள் தள்ளும். டைசன் ப்யூரிஃபயரில் உள்ள மேல் பகுதி ஃபேன் போலவும் வேலை செய்யும். ஜெட் வேகத்தில் காற்றை பிளேடுகள் இன்றி வெளியேற்றும். சுற்றுவட்டார பகுதியில் சுத்தமான காற்றை வெளியேற்ற இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. கோடை காலத்தில் ஏசி தேவைப்படும். இதற்கு அறையில் தட்வ வெட்ப நிலையை கண க்கிட்டு டைசன் ப்யூரிஃபயர் ஃபேன் ஆக பயன்படுத்தலாம்.

எளிதில் கழட்டி மாட்டலாம்

எளிதில் கழட்டி மாட்டலாம்

டைசன் ப்யூர் கூல் லிங்க் ப்யூரிஃபயரின் மொத்த எடை 7.9 பவுண்ட் மட்டுமே. 7.7*4.3*40.1 இஞ்ச் அளவில் மட்டுமே இருக்கிறது. அதனால் வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இதை வைத்துக் கொள்ளலாம். இதன் செயல்பாடு மையப்படுத்தி தான் இருக்கும். இதன் முழு செட் அப்பும் கழட்டி மாட்டும் வகையில் இருக்கும். அடிப்பகுதியில் உள்ள இரு பட்டன்களை அழுத்துவதன் மூலம் மேற்புறத்தை அகற்றிவிடலாம். ஃபேன் வேகத்தை கட்டுப்படுத்தும் டிஸ்ப்ளேவும் சிறிய அளவில் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. வைஃபை இணைப்பு உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளது. ப்யூரிஃபயரின் மேற்பகுதியில் ரிமோட்டை மாட்டிவிடலாம். கீழே விழாது. உங்கள் அறை மற்றும் அலுவலகத்தில் நீங்கள் வடிவமைப்பு மற்றும் அழகின் மீது கவனம் செலுத்துபவராக இருந்தால் டைசன் ப்யூரிஃபயர் பொருத்தமானதாக இருக்கும். ஐயன் ப்ளூ, வெள்ளை, சில்வர் கலர்களில் இது கிடைக்கிறது.

டைசன் ப்யூர் லிங் செயல்பாடு

டைசன் ப்யூர் லிங் செயல்பாடு

டைசன் ப்யூர் கூல் லிங்க் ஏர் ப்யூரிஃபயர் 360 டிகிரியில் வேலை செய்யும். இதில் உள்ள ஃபில்டர் 99.05 சதவீத 0.1 மைக்ரான அளவு கொண்ட துகள்களையும் வடிகட்டிவிடும். இதில் உள்ள கார்பன் ஃபில்டர் பெயின்ட் மற்றும் மோசமான நாற்றம் அடங்கிய நச்சுக்களையும் பிடித்து வைத்துக் கொள்ளும். அறையின் அளவுக்கு ஏற்ப ப்யூர் லிங் ஏர் ப்யூரிஃபயர் செயல்படும். நடுத்தர அளவு கொண்ட அறைக்கு ஒரு ப்யூரிஃபயர் போதுமானது. அதே சமயம் பெரிய அறைக்கு 2 ப்யூரிஃபயர்களை பயன்படுத்த வேண்டும்.

360 டிகிரி பாதுகாப்பு

360 டிகிரி பாதுகாப்பு

அறையின் மூலை முடுக்குக்கிலும் கவனம் செலுத்தும் வகையில் டைசன் எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபில்டரில் உள்ள 360 டிகிரி ஓட்டைகள் அனைத்து திசைகளில் இருந்தும் காற்றை உள்ளே இழுத்துக் கொள்ளும். இதன் மூலம் அறையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இந்த ப்யூரிஃபயரை வைத்து பயன்படுத்தலாம். அனைத்து பகுதிகளில் இருந்தும் காற்றை உள்ளே இழுத்து சுத்திகரித்து வெளியே தள்ளிவிடும். தீங்கு விளைவிக்கும் மாசு பொருட்கள் அறைக்குள் மீண்டும் தப்பிச் சென்றுவிடாமல் தடுக்கும் ஆற்றல் இந்த டைசன் ப்யூரிஃபயருக்கு உண்டு.

ரிமோட் கன்ட்ரோல் மற்றும் டைசன் ஆப்

ரிமோட் கன்ட்ரோல் மற்றும் டைசன் ஆப்

மொபைலில் இருந்து டைசன் ப்யூரிஃபயரை கட்டுப்படுத்தும் வகையில் பிரத்யே மொபைல் ஆப்பை டைசன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அறை காற்றின் தரத்தை கண்காணிக்கலாம். அதோடு அனைத்து செட்டிங்குகளையும் மொபைல் ஆப் மூலமே மாற்றி அமைக்கலாம். தானியங்கி மோடிலும் போட்டுவிடலாம். ஃபேன் வேகம், சுழற்சியை கட்டுப்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட நேரத்தில் ஃஆப் ஆகும் வகையில் செட்டிங்ஸ் வைக்கலாம். காற்றின் தர அறிக்கையும் மொபைல் ஆப் மூலம் பெறலாம்.

தீர்வு

தீர்வு

வட இந்தியாவில் காற்றின் தன்மை ஏற்கனவே மோசமடைந்து விட்டது. எதிர்வரும் பயிர் அறுவடை, தீபாவளி பண்டிகை, குளிர்காலம் போன்ற காலங்களின் காற்றின் வேகம் குறைந்து தட்பவெட்ப நிலையும் குறை ந்துவிடும் என்பதால் காற்றின் தன்மை மேலும் மோசமடையும். ஏசி, வாட்டர் ப்யூரிஃபயர் போன்று ஏர் ப்யூரிஃபயரும் வீட்டிற்கு அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. அதனால் ஏர் ப்யூரிஃபயர் ஆடம்பர பொருள் என்பது கிடையாது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டைசன் ப்யூரிஃபயர் விற்பனைக்கு வந்துள்ளது. 360 டிகிரி ஃபில்ட்ரேஷன் தொழில்நுட்ப வடிவமைப்பு என்பது கூடுதல் பயனை அளிக்கும். அதோடு மொபைல் ஆப் நமக்கு பலவிதமான சவுகர்யங்களை அளிக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர அறைகளுக்கு இது போதுமானது. பெரிய அறைகளாக இருந்தால் மட்டும் 2 டைசன் ப்யூரிஃபயர்களை பயன்படுத்த வேண்டும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டைசன் நிறுவன பொருட்கள் ‘‘டைசன் ஃபிளாக்ஷிப் ஸ்டோர் லெவல் ஒன், டிஎல்ஃஎப் பிர £மினேட் மால், வாசந்த் குஞ்ச், நியூடெல்லி'' என்ற முகவரியில் கிடைக்கிறது. ப்யூர் கூல் ஏர் லிக் ப்யூரிபயர் ரூ.39,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Dyson Pure Cool Link Air Purifier Review Innovative design and plenty of features ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X