டி.டி.எஸ்: எக்ஸ் vs டால்பி அட்மாஸ் .. அது தான்னே இது! கதையாகி விடுமா?

திரையரங்குகளுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், கேட்பவர்களுக்கு சிறப்பான ஒலி அனுபவத்தை தரவல்லது.

|

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மல்டி சேனல் சவுண்ட் சிஸ்டத்தின் இடத்தை தற்போது புதிதாக வளர்ந்து வரும் 3டி ஆடியோ சிஸ்டங்கள் பிடித்துவிட்டன. இந்த 3டி ஆடியோ அனுபவத்தை திரைப்படங்கள், தொலைக்காட்சி, கேமிங் மற்றும் இசை போன்றவற்றுடன் பெற முடியும். மேலும் இது எப்போதும் இல்லாத வகையில் இத்துறையிவ் அதிவேகமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

புதிதுபுதிதாக உருவாகி வரும் ஆடியோ வகைகளான டி.டி.எஸ்:எக்ஸ், டால்பி அட்மாஸ் மற்றும் அரோ 3டி போன்றவை ஆடியோ ஆர்வலர்களுக்கும், வீட்டிலேயே திரைப்படம் பார்க்கும் மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆடியோ வகைகளில் எது சிறந்தது என எளிதில் கண்டறிய முடியாவிட்டாலும், அவை ஒவ்வொன்றின் அம்சங்கள் என்னென்ன , நிறை மற்றும் குறைகளை பட்டியலிடுவதன் மூலம் அவற்றை பற்றிய முழுவிவரம் தங்களுக்கு தெரித்துவிடும்.

டால்பி அட்மாஸ்(Dolby Atmos)

டால்பி அட்மாஸ்(Dolby Atmos)

திரையரங்குகளுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், கேட்பவர்களுக்கு சிறப்பான ஒலி அனுபவத்தை தரவல்லது. இந்த டால்பி அட்மாஸில் உள்ள ஒலிப்பெருக்கியின்(ஸ்பீக்கர்) வடிவமைப்பு, மல்டி சேனல் ஸ்பீக்கர் சரவுண்டிங் சிஸ்டத்துடன் ஒத்துப்போனாலும், அதைத்தவிர வேறெந்த ஒற்றுமைகளும் இல்லை.

கேட்பவர்களை சுற்றியுள்ள ஒலிப்பெருக்கிகள், அனைத்து திசைகளிலும் ஒலி அலைகளை கடத்தாமல், ஒலி உருவாகும் இடத்திலிருந்து முப்பரிமாண இடத்தை உருவாக்கி அதன் மூலம் 3டி வழியை பின்பற்றிச் செல்கிறது. கேட்பவர்களுக்கு இயற்கையான அனுபவத்தை தரும்வகையில் சவுண்டு சிஸ்டம் ஒலியை செலுத்துகிறது. ஒலி உருவாகும் இடத்திலேயே அதன் ஒலியளவு, சத்தம் மற்றும் ஏற்ற இறக்கங்களை மாற்றிக்கொள்கிறது.

திரையரங்கின் உள்ளே டால்பி அட்மாஸின் சிறப்பான அனுபவத்தை பெற, 64 ஸ்பீக்கர்களும், வீட்டில் 14 ஸ்பீக்கர்களும் தேவைப்படும்.

டிடிஎஸ்:எக்ஸ்(DTS:X)

டிடிஎஸ்:எக்ஸ்(DTS:X)

இது டிடிஎஸ் என்றும் கலிப்போர்னியா நிறுவனத்தின் தயாரிப்பாகும். ஆப்ஜக்ட் பேஸ்டு ஆடியோ கேடெக்கான இது, பன்முகப் பரிமாண ஒலி அனுபவத்தை தர உருவாக்கப்பட்டது. அதை செய்யும் பொருட்டு சுற்றியுள்ள அமைப்புகளில் உயர அளவீடுகளை சேர்த்து அதன் மூலம் ஒலியின் துல்லியத்தன்மையை அதிகரித்துள்ளது.டிடிஎஸ்:எக்ஸ் அனைவரும் மாற்றம் செய்யும் வகையிலான (Open and royalty free) பல பரிமாண ஆடியோ தளம் ஆகும். ஒலி அலைகள் கேட்பவரை அடையும் முன்னர் அதில் மாற்றம் செய்து, கேட்பவர் இடத்தை கண்டறிந்து, மேலும் ஒலி பொறியாளர் அதன் ஒலியளவு, நகரல் போன்றவற்றை கட்டுபடுத்தவும் இதன் மூலம் முடியும்.

டால்பி அட்மாஸை போல கூடுதல் ஸ்பீக்கர்கள் இல்லாமலேயே, டிடிஎஸ்:எக்ஸின் சிறப்பான அனுபவத்தை பெற முடியும்.

ஒற்றுமைகள்

ஒற்றுமைகள்


1) இவை இரண்டுமே இழப்பில்லா குறியீடுகளை ஏற்கும்.


2)ஆப்ஜட்க் அடிப்படையில்லாத, பாரம்பரிய ஒலிகளை மாற்றும் வல்லமையுடையவை.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
வேற்றுமைகள்

வேற்றுமைகள்

டால்பி அட்மாஸ் சிஸ்டத்தில் 7.1 சேனல் பெட்டுடன் 4 உயர ஸ்பீக்கர்களும் இருப்பதால், இதை முழுமையாத அனுபவிக்க உங்களிடம் ஏற்கனவே உள்ள சுற்றுப்புற அமைப்பை மாற்ற வேண்டும்.

அதே நேரம், டிடிஎஸ்:எக்ஸில் இது போன்ற சிறப்பு ஏற்பாடுகள் தேவையில்லை. மேலும் தற்போதைய அமைப்பில் எத்தனை ஸ்பீக்கர்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் 12 சேனல்களும் இயங்கும்.

Best Mobiles in India

English summary
DTS:X Vs Dolby Atmos: Similarities and Differences ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X