தூக்குங்க இந்த குட்டி பையனை.. ரூ.4900 விலை குறைப்பு + ரூ.4000 பேங்க் ஆபர்.. Apple பட்ஜெட் MacBook விலை சரிவு!
நேற்றோ இன்றோ அல்ல.. கடந்த பல ஆண்டுகளாகவே - ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் எப்போதுமே (பட்ஜெட் வாசிகளுக்கு) சற்று எட்டாத தூரத்தில் இருப்பதாக உணரப்பட்டு வருகிறது. இதை சரிசெய்ய வேண்டும் என்றுதான், குபெர்டினோவை தலைமையிடமாகக் கொண்ட இந்த தொழில்நுட்ப நிறுவனம், சமீபத்தில் மேக்புக் நியோ (MacBook Neo) மாடலை அறிமுகப்படுத்தியது.
இதுவரை வெளியான மேக்புக் மாடல்களிலேயே இதுதான் மிகவும் குறைந்த விலை மேக்புக் ஆக ஆப்பிள் நிறுவனம் இதை நிலைநிறுத்தியது. எதிர்பார்த்ததை போலவே, அறிமுகமான சில நாட்களிலேயே, பட்ஜெட் வாசிகள் மத்தியில் இது நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக - மாணவர்கள் மற்றும் லோ பட்ஜெட்டில் லேட்டஸ்ட் மேக்புக் மாடலை வாங்க விரும்பியவர்கள் மத்தியில்!

இதற்கிடையில், அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது மேக்புக் நியோ மீது நேரடி விலை குறைப்பு + பேங்க் டிஸ்கவுண்ட்டை அறிவித்து, வாங்குபவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. மேக்புக் நியோ மாடலின் அறிமுக விலை என்ன? தற்போது அமேசானில் கிடைக்கும் ஆபர் விலை என்ன?
தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஆப்பிளின் லேட்டஸ்ட் மாடல் ஆக அறிமுகமான மேக்புக் நியோ (Apple MacBook Neo) ஆனது ரூ.65,000 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த மார்ச் 2026-ல் தான் அறிமுகமானது. அந்த நேரத்தில் மேக்புக் நியோவின் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.69,900 க்கு விற்பனையானது
தற்போது ரூ.4900 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.65000 க்கு வாங்க கிடைக்கிறது. இது எந்த வங்கி சலுகை அல்லது கூப்பன் ஆபரும் இல்லாத நேரடி தள்ளுபடி விலை ஆகும். கூடுதலாக ரூ.4000 வரையிலான பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் பே வழியிலான கேஷ்பேக் ஆபரும் கிடைக்கிறது. இவைகளின் கீழ் மேக்புக் நியோ மாடலின் விலையை மேலும் குறைக்க முடியும்.
ஏன் திடீரெனெ விலை குறைகிறது? மேக்புக் நியோ மாடலை நம்பி வாங்கலாமா? மேக்ஓஎஸ் (macOS) கொண்டு இயங்கும் மேக்புக் நியோவானது, முதன்மையாக மாணவர்கள், சாதாரண பயனர்கள் மற்றும் அன்றாட உற்பத்தித்திறன், பிரவுஸிங், ஸ்ட்ரீமிங் மற்றும் லேசான கிரியேட்டிவ் வேலைகளுக்கு நம்பகமான லேப்டாப்பை தேடும்.. முதல் முறையாக மேக்புக்கை வாங்குபவர்களை இலக்காக கொண்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிளின் மிகவும் நம்பிக்கைக்குரிய வெளியீடுகளில் ஒன்றாக மேக்புக் நியோ பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை லேப்டாப் ஆக இது அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
இது போதுமான விநியோகத்தை பராமரிக்க புதிய வழிகளை ஆராய ஆப்பிளை தூண்டியதாக கூறப்படுகிறது. அதாவது அழுத்தத்தை குறைக்க, பேஸிக் 256ஜிபி மேக்புக் நியோ நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆக மாணவர்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு நம்பகமான லேப்டாப்பை தேடும் பயனர்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் கிடைக்கும் இந்த ஆபரை முடிந்த வேகத்தில் பயன்படுத்தி கொள்வது நல்லது.
இதே விலைக்கு இன்னும் சக்திவாய்ந்த ஹார்ட்வேர்-ஐ வழங்கும்விண்டோஸ் லேப்டாப்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிளின் இந்த மேக்புக் மாடல் கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும், ஆப்பிள் ஈகோசிஸ்டமிற்குள் நுழைய.. இதுவொரு எளிமையான நுழைவாயில் ஆகும். அப்பிளின் மேக்புக்குகள் அவற்றின் நீண்ட மென்பொருள் ஆதரவு சுழற்சி, நம்பகமான பேட்டரி ஆயுள் மற்றும் சீரான நீண்ட கால செயல்திறன் ஆகியவற்றிற்காக அறியப்படுகின்றன.
ஆப்பிள் மேக்புக் நியோ முக்கிய அம்சங்கள்:
- 2408 × 1506 ரெசல்யூஷன்
- 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 13-இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே
- ஆப்பிளின் ஏ18 ப்ரோ சிப்
- 6-கோர் சிபியு மற்றும் 5-கோர் ஜிபியு
- 8ஜிபி ரேம்
- 256ஜிபி/ 512ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
- 16 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இரண்டு யுஎஸ்பி-சி போர்ட்கள்
- ஒரு மேஜிக் கீபோர்டு லேஅவுட்
- ஒரு பெரிய கிளாஸ் டிராக்பேட்
- ஒரு 1080p வெப்கேம்
- டூயல் ஸ்பீக்கர்கள்
- டூயல் மைக்ரோஃபோன்கள்
- எடை குறைந்த அலுமினிய யூனிபாடி டிசைன்
- சில்வர், பிளஷ், சிட்ரஸ் மற்றும் இண்டிகோ ஆகிய 4 கலர் ஆப்ஷன்கள்


Click it and Unblock the Notifications