ஸ்மார்ட் வாட்ச் அலெர்ட்! செப்.7 வரை பொறுமை அவசியம்! ஏனென்றால்?

|

கடந்த பல மாதங்களாக திட்டமிட்டும் கூட.. பட்ஜெட் விலையில் ப்ளூடூத் காலிங் வசதியை வழங்கும் ஒரு நல்ல ஸ்மார்ட் வாட்சை (Bluetooth Calling Smartwatch) இன்னமும் உங்களால் வாங்க முடியவில்லையா?

கவலையை விடுங்க! இந்த செப்டம்பர் மாதம் கண்டிப்பாக வாங்கி விடலாம்!

ஏனெனில்?

ஏனெனில்?

Realme பிராண்டின் துணை நிறுவனமான DIZO, வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று, அதன் 2 புதிய ஸ்மார்ட் வாட்சுகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

சுவாரசியமான விடயம் என்னவென்றால், DIZO அறிமுகம் செய்யும் 2 புதிய ஸ்மார்ட் வாட்சுகளுமே நிறுவனத்தின் முதல் ப்ளூடூத் காலிங் ஆதரவை பேக் செய்யும் மாடல்கள் ஆகும்!

கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!

Watch R Talk மற்றும் Watch D Talk!

Watch R Talk மற்றும் Watch D Talk!

வாட்ச் ஆர் டால்க் மற்றும் வாட்ச் டி டால்க் என்கிற பெயரின் கீழ் வருகிற செப்.7 ஆம் தேதி அறிமுகமாகும் DIZO நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்கள் ஆனது, அதே நாளில், அதாவது செப்டம்பர் 7 ஆம் தேதி மதியம் முதலே இந்தியாவில் கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டுமே அப்கிரேடட் மாடல்கள் ஆகும்!

இந்த இரண்டுமே அப்கிரேடட் மாடல்கள் ஆகும்!

நினைவூட்டும் வண்ணம், DIZO-வின் வாட்ச் ஆர் டால்க் மற்றும் வாட்ச் டி டால்க் மாடல்கள் ஆனது இந்தியாவில் ஏற்கனவே வாங்க கிடைக்கும் டிஸோ வாட்ச் ஆர் மற்றும் டிஸோ வாட்ச் டி-க்கு அடுத்ததாக வரும் மாடல்கள் ஆகும்.

இவைகளுக்குள்ளான முக்கிய வேறுபாடாக, ப்ளூடூத் காலிங் அம்சம் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!

DIZO Watch R Talk ஸ்மார்ட் வாட்ச்சில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

DIZO Watch R Talk ஸ்மார்ட் வாட்ச்சில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

DIZO-வின் கூற்றுப்படி, வாட்ச் ஆர் டால்க் ஆனது 392 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 360 x 360 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 1.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.

500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை ஆதரிக்கும் இதன் டிஸ்பிளேவானது ஆல்வேஸ் ஆன் ஆதரவையும் கொண்டிருக்கும்.

உலோகத்தால் ஆன இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது துருப்பிடிக்காத எஃகு கொக்கியுடன் கூடிய சிலிகான் ஸ்ட்ராப்பை கொண்டுள்ளது மற்றும் டிஸ்பிளேவில் டெம்பர்ட் கிளாஸையும் பேக் செய்கிறது.

வாய்ஸ் அசிஸ்டென்ட் வேற!

வாய்ஸ் அசிஸ்டென்ட் வேற!

டிஸோ நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது AI வாய்ஸ் அசிஸ்டென்ட்டிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது மற்றும் 120 சதவீதம் லார்ஜர் சவுண்ட் ட்ரைவ்-ஐயும் கொண்டுள்ளது.

பேட்டரி லைஃப்-ஐ பொறுத்தவரை, வழக்கமான பயன்பாட்டின் கீழ் இது 10 நாட்கள் வரையிலான பேட்டரி ஆயுளை வழங்குகிறது மற்றும் ப்ளூடூத் காலிங் அம்சத்தை பயன்படுத்தும் போது இதன் பேட்டரி லைஃப் ஆனது 5 நாட்கள் வரை நீளும்!

OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!

DIZO Watch D Talk ஸ்மார்ட் வாட்ச்சில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

DIZO Watch D Talk ஸ்மார்ட் வாட்ச்சில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

மறுகையில் உள்ள டிஸோ வாட்ச் டி டால்க் ஆனது 1.8 இன்ச் சதுர வடிவிலான டயல் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் மற்றும் 120 -க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை வழங்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைக்கு, டிஸோ நிறுவனம் அதன் வாட்ச் டி டால்க் மாடல் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

வழக்கம் போல Flipkart வழியாக வாங்க கிடைக்கவுள்ள இந்த டிஸோ வாட்ச்களின் அறிமுக தேதி, முக்கிய அம்சங்கள், விற்பனை விவரங்கள் வெளியானதே தவிர, இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களின் விலை விவரங்கள் பற்றி எந்த வார்த்தையும் இல்லை!

மிட்-ரேன்ஜ் ப்ரைஸ்ல.. சிங்கிள் ஸ்டோரேஜ்ல.. 'கிங்' போல ஒரு புதிய Vivo போன்!மிட்-ரேன்ஜ் ப்ரைஸ்ல.. சிங்கிள் ஸ்டோரேஜ்ல.. 'கிங்' போல ஒரு புதிய Vivo போன்!

கண்டிப்பாக பட்ஜெட் விலை தான்.. ஏனெனில்?

கண்டிப்பாக பட்ஜெட் விலை தான்.. ஏனெனில்?

எப்படி பார்த்தாலும் இவைகள் பட்ஜெட் விலைக்குள் தான் அறிமுகமாக வேண்டும். ஏனெனில் டிஸோ வாட்ச் டி ஆனது ரூ.2,999 க்கும், டிஸோ வாட்ச் ஆர் ஆனது ரூ.3,999 க்கும் தான் வாங்க கிடைக்கிறது.

ஆக இந்த இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களுமே ரூ.5000 என்கிற பட்ஜெட்டின் கீழ் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Dizo First Bluetooth Calling Smartwatches Watch R Talk and Watch D Talk India launch on September 7

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X