Home
Gadgets

இந்திய சந்தையை கலக்க வரும் டிஜிடெக்கின் 3 புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்

பட்ஜெட் மீது அதிக கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு டிஜிடெக் நிறுவனம் புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்கிறது.

பட்ஜெட் மீது அதிக கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு டிஜிடெக் நிறுவனம் புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்கிறது.

இந்திய சந்தையை கலக்க வரும் டிஜிடெக்கின் 3 புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்

போட்டோகிராஃபிக் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரிபாகங்கள் சந்தையில் உள்ள இந்திய நிறுவனமான டிஜிடெக், DBS 021, DBS 022 மற்றும் DBS 023 என்ற மூன்று புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் அறிமுகம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேற்கூறிய இந்த ஸ்பீக்கர்களை ஒரு முறை சார்ஜ் செய்தால், ஏறக்குறைய 4 முதல் 5 மணிநேரம் வரை செயல்படக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர்களில் 3.7V/1200 mAh உள்கட்டமைப்பு கொண்ட பேட்டரி மற்றும் 4 முதல் 5 மணிநேரம் வரை தொடர்ந்து இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக் கூடிய வகையிலான மைக்ரோஃபோன் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இந்த ஸ்பீக்கர்கள், ப்ளூடூத், AUX IN, TF கார்டு ஆகியவை தவிர FM ரேடியோ கூட ஆதரிக்கக் கூடியது. இதில் 6 வாட்ஸ் வெளியீட்டை கொண்டு, 10 மீட்டர்கள் வரை கிரையக்க கூடிய ப்ளூடூத் 4.2+EDR-யை கொண்டுள்ளது.

இந்த ஸ்பீக்கர்கள், நீலம், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் அடிப்படை கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. டிஜிடெக் DBS 021, DBS 022 மற்றும் DBS 023 ஆகியவை முறையே, ரூ.1,295, ரூ.1,595 மற்றும் ரூ.1,895 என்ற விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கர்களை பல்வேறு மொபைல் உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையகங்கள் மட்டுமின்றி, இணையதள விற்பனை தளங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றிலும் கிடைக்கும்.

முன்னதாக, கடந்த ஆகஸ்டு மாதம் இந்த நிறுவனம், ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்போன்களை மூன்று வகைகளில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ப்ளூடூத் ஹெட்போன்கள் DBH-005, DBH-011 மற்றும் DBH-012 ஆகியவை ஆகும்.

சத்தத்தை குறைத்து கொள்ள மென்மையான காது பேட்கள் மூலம் இந்த டிஜிடெக் ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். இவை போனில் பேசும் போதும், மியூஸிக் கேட்கும் போதும், சிறப்பான செயல்பாட்டை அளிக்கின்றன. USB மூலம் 2 முதல் 3 மணிநேரம் வரை சார்ஜ் செய்தால், இந்த ஹெட்போன்கள் 8 மணிநேரம் வரை செயல்படுகின்றன. மேலும் 120 மணிநேரம் வரை ஸ்டாண்டுபை நிலையில் நீடிக்கவும் செய்கின்றன. இந்த ப்ளூடூத் ஹெட்போன்களில் DBH 005-க்கு ரூ.1,495யும், DBH 011 மற்றும் DBH 012 ஆகியவை ரூ.1,995 என்ற விலையிலும் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Digitek unveils three new Bluetooth speakers for Indian market: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X