150எம்பி பிஎஸ் வரை பதிவிறக்க வேகத்தை வழங்கும் 4ஜி ஏஎல்டிஇ மோடம் அடாப்டர்.!

Written By:

டிஜிசோல் (DIGISOL) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய அதிவேக 4ஜி எல்டிஇ யூஏசுபி அடாப்டர்தனை அறிமுகம் செய்துள்ளது. இது 150எம்பி பிஎஸ் வரை பதிவிறக்க வேகத்தை வழங்குகிறது. டாங்கிள் ரூ.2,799- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது இந்த விலையில் கிடைக்கும் டாங்கிள்களில் இது பல பயனுள்ள அம்சங்களை வழங்கும் ஒன்றாக திகழ்கிறது.

150எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை வழங்கும் 4ஜி ஏஎல்டிஇ மோடம் அடாப்டர்.!

அடாப்டரின் தனியுரிம மென்பொருட்கள் ஆனது உரை செய்தி (எஸ்.எம்.எஸ்), பாரிய சேமிப்பு, தொலைபேசி புத்தகம் போன்ற ஒரு ஸ்மார்ட்போனின் பல நன்மைகளை அனுபவிக்க உதவுகிறது. 4ஜி யூஎஸ்பி அடாப்டரை ஒரு சிறிய சேமிப்பக சாதனமாக பயன்படுத்திக்கொள்ளலாம், நீங்கள் ரோமிங் செய்தாலும் உங்கள் மதிப்புமிக்க தரவை நீங்கள் சுமக்க முடியும்.

இந்த அடாப்டர் ஒரு மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டுடன் 64 ஜிபி வரை தரவுகளை வைத்திருக்கும். மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 4ஜி யூஎஸ்பி அடாப்டருக்கு நேரடியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவைச் சேமிக்கும் ஆதரவும் இதில் உண்டு என்று நிறுவனம் கூறுகிறது.

அடாப்டரின் முக்கிய அம்சங்கள்:

- 4ஜி எல்டிஇ பேண்ட் பி1, பி3, பி5, பி7, போ38, பி40, பி41 ஆதரிக்கிறது

- 3 ஜி மற்றும் 2 ஜி நெட்வொர்க்குகளையும் ஆதரிக்கிறது

- எஸ்எம்எஸ், தொலைபேசி புத்தகம், மென்பொருள் வழியாக யூஎஸ்ஸ்டி ஆதரவு.

- யூஎஸ்பி 3.0 உயர் வேக இடைமுக ஆதரிக்கவும்.

- பெரிய சேமிப்புக்கான மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 64ஜிபி வரை அதிகபட்ச திறன்.

- சிடி ரோம் தேவை இல்லை, உள்ளடங்கிய மென்பொருள்.

- ப்ளக் மற்றும் ப்ளே நிறுவல்.

- விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / வின் 7 / வின் 8 / 8.1 / வின் 10 / மேக் ஓஎஸ் ஓஎஸ்எக்ஸ்10.7Read more about:
English summary
DIGISOL launches 4G LTE Modem Adapter. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot