Home
Gadgets

1000+ வாட்ச் பேஸ்.. கெத்தான லுக்குடன் களமிறங்கிய Diesel Griffed Gen 6.! ரேட் என்ன தெரியுமா?

Diesel Griffed Gen 6: பார்த்ததும்... அடடா.. பார்க்கவே அம்சமா இருக்கே.! லுக்கே கெத்தா இருக்கே.! என்று உணர வைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் டிவைஸ் டீசல் நிறுவனத்தில் இருந்து புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் சாதனமாகும். டீசல் என்று சொன்னதுமே, பலருக்கும் இது ஒரு சாதாரண ஸ்மார்ட் வாட்ச் இல்லை என்பது புரிந்திருக்கும்.

உலக புகழ்பெற்ற டீசல் பிராண்டில் இருந்து வெளிவந்த புது ஸ்மார்ட்வாட்ச்.!

உலக புகழ்பெற்ற டீசல் பிராண்டில் இருந்து வெளிவந்த புது ஸ்மார்ட்வாட்ச்.!

இந்த தலைசிறந்த முன்னணி பிராண்ட் ஆன டீசல் (Diesel) இடமிருந்து வாட்ச் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயமாக சில பல ஆயிரங்களை செலவிட வேண்டியதுள்ளது என்பதும் புரிந்திருக்கும்.

டீசல் பிராண்டில் இருந்து இந்த ஸ்மார்ட் வாட்சை (smartwatch) வாங்க வேண்டும் என்றால், கட்டாயமாக நீங்கள் இரு கெத்தான நபராகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இது பாக்கெட் பணத்தை உரிந்துவிடும்.

எது..! 1000+ வாட்ச் பேஸ்-ஆ.! உண்மையாவா?

எது..! 1000+ வாட்ச் பேஸ்-ஆ.! உண்மையாவா?

பில்ட்-அப்களை கேட்டு இது ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்சை விட அதிக ரேட் போல என்று தப்பாக நினைத்துவிடாதீர்கள்.

ஆப்பிள் வாட்சுடன் (Apple watch) ஒப்பிடுகையில் இது அதன் விலையில் 4-ல் ஒரு பங்காக மட்டுமே இருக்கிறது.

சரி, இந்த ஸ்மார்ட் வாட்சின் விலையைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் இதில் 1000+ வாட்ச் பேஸ் (watch face) தீம்கள் இருக்கிறது என்பதை உங்கள் கவனத்தில் முதலில் சேர்த்துவிடுகிறோம்.

3 வருடங்களுக்கு தினம் ஒரு வாட்ச் பேஸ் யூஸ் பண்ணலாம்.!

3 வருடங்களுக்கு தினம் ஒரு வாட்ச் பேஸ் யூஸ் பண்ணலாம்.!

இப்போது கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களில் 100+ அல்லது அதிகப்படியாக 500+ வாட்ச் பேஸ் மட்டுமே கிடைக்கிறது.

ஆனால், இந்த டீசல் கிரிஃபட் ஜென் 6 (Disel Griffed Gen 6) மாடலில் 1000+ வாட்ச் பேஸ்கள் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

தினமும் 1 வாட்ச் பேஸ் என்று பயன்படுத்தினால் கூட, ஏறக்குறைய 3 வருடங்களுக்கு நீங்கள் தினமும் 1 வாட்ச் பேஸ் என்று மாற்றம் செய்து பயன்படுத்தலாம்.

இந்தியாவில் களமிறங்கிய Diesel Griffed Gen 6 Smartwatch

இந்தியாவில் களமிறங்கிய Diesel Griffed Gen 6 Smartwatch

டீசல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் (Diesel smartwatch) இன்று இந்தியச் சந்தைக்குள் வந்துள்ளது.

டீசல் நிறுவனம் Griffed Gen 6 மாடலை சமீபத்தில் மற்ற சந்தைகளில் வெளியிட்டது. இது சமீபத்திய புதிய ஹை-டெக் அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் வாட்சில் இன்னும் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்ற முழு விபரங்களையும் இப்போது பார்க்கலாம்.

சக்தி வாய்ந்த ஸ்மார்ட்வாட்ச் சிப்செட் உடன் பட்டையை கிளப்புகிறது.!

சக்தி வாய்ந்த ஸ்மார்ட்வாட்ச் சிப்செட் உடன் பட்டையை கிளப்புகிறது.!

சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ குறிப்புகளின் படி, டீசல் நிறுவனம் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நேர்த்தியான பாணியுடன் அதன் தயாரிப்புகளில் இணைக்கிறது.

அப்படி தனித்துவமாக உருவாக்கப்பட்ட புதிய டிவைஸ் தான் இந்த புது Diesel Griffed Gen 6 ஸ்மார்ட்வாட்ச். இந்த வாட்ச் ஹூட்டின் கீழ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 4100+ ஸ்மார்ட் வாட்ச் சிப்செட்டை கொண்டுள்ளது.

பல அம்சங்களை இந்த ஸ்மார்ட் வாட்ச் பேக் செய்கிறதா?

பல அம்சங்களை இந்த ஸ்மார்ட் வாட்ச் பேக் செய்கிறதா?

இதன் செயல்திறன் 30 சதவீத அதிகரிப்பைக் கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட புளூடூத் V5 சிப்பைக் கொண்டுள்ளது. இது சிறந்த பெர்ஃபார்மன்ஸ், இணைப்பு மற்றும் ரேஞ் அம்சத்தை வழங்குகிறது.

இது ஒரு பியூச்சர்ஸ்டிக் டிஸைனுடன் அறிமுகம் செய்யப்பட்ட நவீன கால ஸ்மார்ட்வாட்ச் என்பதால், இதில் இதயத் துடிப்பு கண்காணிப்பு, கார்டியோ கண்காணிப்பு, SpO2 இரத்த ஆக்ஸிஜன் மேப்பிங், ஸ்டெப் கவுண்ட் மற்றும் ஸ்லீப் மானிட்டர் போன்ற அம்சங்களை பெற்றுள்ளது.

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே.. காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்.. லிஸ்ட் இன்னும் இருக்கு.!

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே.. காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்.. லிஸ்ட் இன்னும் இருக்கு.!

இந்த ஸ்மார்ட் வாட்சின் டிஸ்பிளே ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவாக வழங்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல, இந்த ஸ்மார்ட் வாட்ச் கூடுதல் தனிப்பயனாக்கத்தை வழங்கும் ஆயிரக்கணக்கான வாட்ச் முகங்களை ஆதரிக்கிறது.

மேலும், இது காண்டாக்ட்லெஸ் பேமெண்ட், மியூசிக், சோசியல் மீடியா, நியூஸ் மற்றும் ஸ்டாப்-வாட்ச் போன்ற பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது. மற்ற அம்சங்கள் என்று பார்க்கையில் இதில், ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் பட்டன்கள் கொண்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கூட இருக்கிறதா?

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கூட இருக்கிறதா?

இது, இதன் முந்தைய தலைமுறையை விட வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது வெறும் 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய கூடிய பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்மார்ட் பேட்டரி மோட் போன்ற பவர் சேவிங் விருப்பத்தையும் வழங்குகிறது. இது பேட்டரி ஆயுளை மேம்படுத்துகிறது. இந்த வாட்ச் 3ATM ஸ்விம் ப்ரூப் ஆதார பாதுகாப்புடன் வருகிறது.

டீசல் Griffed Gen 6 வாட்சின் விலை என்ன?

டீசல் Griffed Gen 6 வாட்சின் விலை என்ன?

டீசல் Griffed Gen 6 ஆனது சில்வர் மற்றும் பிளாக், துகன்மேட்டால் பிளாக், அல்லது சில்வர் போன்ற 3 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

இதன் விலை பற்றி பார்க்கையில், இந்தியச் சந்தையில் இந்த டிவைஸ் ரூ. 25,995 என்ற மிகப்பெரிய விலைப் புள்ளியைக் கொண்டுள்ளது.

இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட டீசல் கடைகளில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Diesel Griffed Gen 6 Launched Smartwatch With 1000+ Watch Face In India For Rs 25995
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X