ரூ.3999 விலையில் டீடெல் எல்சிடி டிவி அறிமுகம்: வேறலெவல்.!
இதுபோன்ற மலிவு விலை டிவி மாடல்கள் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும், குறிப்பாக மளிகை ஸ்டோர்களில் கூட இதுபோன்ற டிவி மாடல்களை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மலிவு விலையில் எல்சிடி டிவி மாடல்கள் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் மிகவும் மலிவு விலையில் புதிய எல்சிடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது டீடெல் நிறுவனம்.

மேலும் இந்த எல்சிடி டிவி மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், குறிப்பாக இந்த சாதனத்தை டீடெல் மொபைல் ஆப் மூலம் வாங்கமுடியும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விலை:
டீடெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எல்சிடி டிவி மாடலின் பெயர் டீ1 எல்சிடி டிவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.4,999என்று கூறப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.3,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே:
இந்த சாதனம் 19-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1366x768 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, பினபு ஏ-பிளஸ்
கிரேடு பேனல் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பீக்கர்:
டீடெல் டீ1 எல்சிடி டிவி மாடலில் 12வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது எனவே துல்லியமான ஆடியோவை கேட்கமுடியும்,
அதேபோன்று எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மலிவு விலை
இதுபோன்ற மலிவு விலை டிவி மாடல்கள் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும், குறிப்பாக மளிகை ஸ்டோர்களில் கூட இதுபோன்ற டிவி மாடல்களை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications