வியக்கவைக்கும் விலையில் டிடெல் 65-இன்ச் 4கே எல்இடி ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்.
டிடெல் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி, மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் வியக்கவைக்கும் விலையில் 65-இன்ச் (DI65SKA)ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் அமேசான், பேடிஎம், டிடெல்.காம் போன்ற வலைதளங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 65-இன்ச் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3840 X 2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பிரைட்நஸ் அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி:
65-இன்ச் (DI65SKA) ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இணைப்பு ஆதரவுகள்:
இந்த டிடெல் சாதனத்தில் 2 எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஹெட்போன் ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் 20வாட் ஸ்டிரீயோ ஸ்பீக்கர் ஆடியோ அவுட்புட் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளம்:
65-இன்ச் டிடெல் சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் போன்ற பல்வேறு செயலிகளை இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

வியக்கவைக்கும்:
இந்த சாதனத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது, குறிப்பாக எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக 65-இன்ச் டிடெல் சாதனம் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.57,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications