ரூ.6,999-விலையில் மிரட்டலான 32-இன்ச் எல்இடி டிவி அறிமுகம்.!
டிடெல் நிறுவனம் சத்தமில்லாமல் குறைந்த விலையில் தனது 32-இன்ச் எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த டிவி மாடல் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே வசதி
டிடெல் 32-இன்ச் எல்இடி டிவி மாடல் பொதுவாக 1280x720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பீக்கர் வசதி
இந்த 32-இன்ச் எல்இடி டிவி மாடல் பொதுவாக 20வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி டிஜிட்டல் ஒலி தொழில்நுட்பம் ஆதரவுடன் வெளிவந்துள்ளது, மேலும் ஏ-பிளஸ் கிரேடு பேனல் கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால்பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும்.

இணைப்பு ஆதரவுகள்
டிடெல் 32-இன்ச் எல்இடி டிவி சாதனத்தில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம், மேலும கணினியை இணைக்கும் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த எல்இடி டிவி மாடல்..

அட்டகாசமான விலை
மிரட்டலான டிடெல் 32-இன்ச் எல்இடி டிவி மாடலின் விலை ரூ.6,999-ஆக உள்ளது, பின்பு இந்த சாதனத்தை டிடெல் ஆப் மற்றும் இணையதளம் மூலம் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்பு
மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு 19-இன்ச் எல்சிடி டிவி மாடலலை அறிமுகம் செய்தது. குறிப்பாக 1366x768 பிக்சல்மற்றும் ஏ-பிளஸ் கிரேடு பேனல் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் ரூ.3,999 விலையில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications