Home
Gadgets

சும்மா கிழி.. ANC ஆடியோ.. 33 மணி நேர பேட்டரி.. IP54 ரேட்டிங்.. AI நாய்ஸ் கேன்சலிங் மைக்.. எந்த மாடல்?

டெல் (Dell) நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் டிடபுள்யூஎஸ் மாடலான டெல் ப்ரோ பிளஸ் இயர்பட்ஸ் (Dell Pro Plus Earbuds) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. டெல் வயர்லெஸ் ஆடியோ ரிசீவர், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங், மல்டி பாய்ட் கனெக்டிவிட்டி, என்ஹான்ஸ்டு டிரான்பரஸ்சி மோட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த டெல் ப்ரோ பிளஸ் இயர்பட்ஸ் மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெல் ப்ரோ பிளஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் (Dell Pro Plus Earbuds Specifications): இந்த மாடலில் 66dB சிக்னல் டூ நாய்ஸ் ரேடியோ கொண்ட 11.6 எம்எம் டிரைவர் கிடைக்கிறது. எம்இஎம்எஸ் டெக்னாலஜி (MEMS Technology) மைக் மற்றும் வாய்ஸ் ப்ராசஸிங் யூனிட் (Voice Processing Unit) கிடைக்கிறது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது.

சும்மா கிழி.. ANC ஆடியோ.. 33 மணி நேர பேட்டரி.. IP54 ரேட்டிங்.. மாடல்?

ஆகவே, 30 மீட்டர்கள் வரையில் ரேன்ஞ் கிடைக்கும். மல்டி பாய்ட் (Multi Point) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 8 டிவைஸ்களை பேர் (Pair) செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், டெல் வயர்லெஸ் ஆடியோ ரிசீவர் (Dell Wireless Audio Receiver) இருப்பதால், பிரீமியம் கனெக்டிவிட்டி எதிர்பார்க்கலாம்.

அதேபோல டெல் பேர் (Dell Pair) கனெக்டிவிட்டி உள்ளது. ஆகவே, டெல் லேப்டாப், டெக்ஸ்டாப் ஆகியவற்றில் கூடுல் என்ஹான்ஸ்மெண்ட் கிடைக்கும். இதுவொரு இன்-இயர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (In-ear True Wireless Earbuds) மாடலாக இருப்பதால், இயரிங் புரொடெக்சன் (Hearing Protection) கிடைக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் (Active Noise Canceling) வருகிறது.

யுஎஸ்பி-சி வயர்லெஸ் ஆடியோ ரிசீவர் (USB-C Wireless Audio Receiver) கிடைக்கிறது. வாய்ஸ் கால்களில் ஏஐ அவுட்புட் கிடைக்கும். ஏனென்றால், ஏஐ-பேஸ்டு நாய்ஸ் கேன்சலிங் மைக் (AI-based Noise-cancelling Mic) கிடைக்கிறது. இதில் அவுட்டோரிலும் கிளியர் அவுட்புட் கொடுக்க அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்லிங் மோட் (Adaptive Active noise-cancelling Mode) கிடைக்கிறது.

நேச்சுரல் மற்றும் ட்ரூ லைப் சவுண்ட் அவுட்புட் கொடுக்க என்ஹான்ஸ்டு டிரான்பரஸ்சி மோட் (Enhanced Transparency Mode) உள்ளது. இந்த டெல் ப்ரோ பிளஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு டெல் ஆடியோ ஆப் (Dell Audio App) சப்போர்ட் கிடைக்கிறது. இதில் இயர்பட்ஸ் கன்ட்ரோல்கள் மட்டுமல்லாமல், ஃபைண்ட் மை இயர்பட்ஸ் (Find My Earbuds) சப்போர்ட் கிடைக்கிறது.

இயர்பட்களில் தலா 66mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 500mAh பேட்டரி கிடைக்கிறது. ஏஎன்சி மோடில் இயர்பட்களில் மட்டும் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸில் 33 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 1 மணி நேரத்துக்கு பயன்படுத்தலாம்.

ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் தேவைப்படும். IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இந்த டெல் ப்ரோ பிளஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு டச் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஒரு இயர்பட் 6 கிராம் எடை வருகிறது. சார்ஜிங் கேஸ் 50.4 கிராம் எடை வருகிறது. வால்யூம் மட்டுமல்லாமல், மியூட், ஏஎன்சி, டிரான்பன்சி மோட்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுபோக ஆப் மூலமும் கன்ட்ரோல் செய்யலாம். 2 வருடங்களுக்கு ஹார்ட்வேர் மற்றும் அட்வான்ஸ்டு எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் மாடலாக இருப்பதால், ரூ.18,699ஆக விலை இருக்கிறது. பிளாக் கலரில் மட்டுமே கிடைக்கிறது. டெல் தளங்களில் கிடைக்க இருக்கிறது. ஈ-காமர்ஸ் தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Dell Pro Plus Earbuds With 500mAh Battery Active Noise Canceling Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X