Home
Gadgets

வாங்குனா இதுதான்.. 14 இன்ச் ஆன்டி-கிளார் டிஸ்பிளே.. இன்டல்கோர் அல்ட்ரா 7.. விண்டோஸ் 11 ஹோம்.. எந்த மாடல்?

வொர்க் ஃப்ரம் ஹோம் பணியாளர்களுக்கு ஏற்றபடி ஒரு பக்கா லேப்டாப் மாடலாக இன்டல்கோர் அல்ட்ரா 7 ப்ராசஸர், விண்டோஸ் 11 ஹோம் ஓஎஸ், இன்டல் ஆர்க் கிராபிக்ஸ் கார்டு, 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரியுடன் டெல் 14 பிளஸ் (Dell 14 Plus) களமிறங்கி இருக்கிறது. கோபைலட்பிளஸ் பிசி மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ போன்ற மொத்த பீச்சர்களிலும் மிரளவிடும் இந்த டெல் 14 பிளஸ் மாடலின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டெல் 14 பிளஸ் அம்சங்கள் (Dell 14 Plus Specifications): இந்த டெல் மாடலில் 14.0 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுவொரு நான்-டச் (Non-Touch) டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, ஆன்டி-கிளார் (Anti-Glare), கம்போர்ட்வியூ பிளஸ் (ComfortView Plus), 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2.5K ரெசொலூஷன் கிடைக்கிறது.

வாங்குனா இதுதான்! 14 இன்ச் ஆன்டி-கிளார் டிஸ்பிளே.. இன்டல்கோர் அல்ட்ரா!

கோபைலட்பிளஸ் பிசி (Copilot+ PC) கொண்ட விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் இன்டெல் கோர் அல்ட்ரா 7 (Intel Core Ultra 7) ப்ராசஸர் மற்றும் இன்டெல் ஆர்க் (Intel Arc) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த டெல் 14 பிளஸ் மாடலில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஹோம் 2024 (Microsoft Office Home 2024) மற்றும் மைக்ரோசாப்ட் 365 பேசிக் (Microsoft 365 Basic) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஸ்கள் கிடைக்கின்றன. இந்த டெல் 14 பிளஸ் லேப்டாப்பில் பேக்லிட் கோபைலட் (Backlit Copilot) கீபோர்ட் கிடைக்கிறது. ஆனால், நியூமரிக் கீபாட் (Numeric Keypad) கொடுக்கப்படவில்லை. கேமரா சப்போர்ட் கொடுக்கிறது.

ஆகவே, ஃபுல்எச்டிபிளஸ் (FHD) ரெசொலூஷன் கொண்ட கேமரா கிடைக்கிறது. டூயல்-அரேய் மைக்ரோபோன்கள் (Dual-array Microphones) வருகின்றன. இந்த டெல் 14 பிளஸ் மாடலின் ஆடியோ மற்றும் ஸ்பீக்கர்களை பொறுத்தவரை பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படியே வருகின்றன. ஆகவே, டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகிறது.

இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மட்டுமல்லாமல், வேவ் மேக்ஸ்ஆடியோ ப்ரோ (Waves MaxxAudio Pro) சப்போர்ட் கிடைக்கிறது. 2.5W ஆடியோ அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்களில் 5W மொத்த அவுட் கிடைக்கிறது. எல்சிடி கவர் மற்றும் பேஸ் ஆகியவற்றில் அலுமினியம் கிடைக்கிறது. பெசல் மற்றும் பால்ம்ரெஸ்ட்டில் பிளாஸ்டிக் வருகிறது.

ஆகவே, இதில் ஆக்ஸிடென்டல் டேமேஜ் புரொடெக்சன் கிடைக்காது. மைலர் டச்பாட் (Mylar Touchpad) மெட்டீரியல் மற்றும் ப்ரீசியன் டச்பாட் (Precision Touchpad) கிடைக்கிறது. பிரைமரியாக 4-செல் பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 65W டைப்-சி அடாப்டர் கிடைக்கிறது. பால்ம்ரெஸ்ட்டில் ஐஸ் ப்ளூ பவர் பட்டன் (Ice Blue Power Button) கிடைக்கிறது.

இந்த பட்டனில் ஃபிங்கர்பிரிண்ட் ரீடர் (Fingerprint Reader) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மாடலின் வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் வயர்லெஸ் கார்டு (Bluetooth Wireless Card) கிடைக்கிறது. போர்ட்களை பொறுத்தவரையில், டைப்-சி போர்ட், யுஎஸ்பி போர்ட், டிஸ்பிளே போர்ட், தண்டர்போல்ட் + டிஸ்பிளே போர்ட் கிடைக்கிறது.

மேலும், எச்டிஎம்ஐ மற்றும் யுனிவர்சல் ஆடியோ ஜாக் வருகிறது. ஐஸ் ப்ளூ (Ice Blue) கலரில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. இந்த டெல் 14 பிளஸ் லேப்டாப்பின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,18,199ஆக இருக்கிறது. 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ, ரூ.2000 கேஷ்பேக் போன்ற சலுகைகளுடன் கிடைக்கிறது. டெல் தளத்தில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Dell 14 Plus With Intel Core Ultra 7 Windows 11 Home Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X